பக்கம் எண் :

முதற் காண்டம்265

     அங்கு மிகுதியாகக் கூடியிருந்த மக்கள் யாவரும் தெய்வ அருளை
விருப்போடு உட்கொண்டு நல்லாசிகளை வழங்கினர். அங்கு நிகழ்ந்த இத்
திருமணத்தில் மிகுந்து கிடந்த சிறப்பின் தன்மையைத் தொகுத்துக் கூற
வல்லவர் எங்கும் யாரும் இல்லை. அவர்களோடு நகரெல்லை வரைக்கும்
துணையாகச் செல்ல ஒருப்பட்டு, அவ்வாறு செல்வதற்கான இரு வரிசைகள்
பகுத்துக் கொண்டனர். அங்குச் சூசையும் மரியாளும் அக் கூட்டத்தின்
நடுவே ஞான ஒளியைப் பரப்பிய வண்ணமாய் நடந்து சென்றனர்.

     மணமக்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரையிலே சூழ்ந்து சென்று
வழியனுப்பி வைத்தல் தமிழ்நாட்டு மரியாதை வழக்கம்.

              மணமக்கள் நாசரெத்தை அடைதல்

      - விளங்காய், கூவிளங்காய், - விளங்காய், கூவிளங்காய், - விளங்காய்,
தேமா, புளிமா
 
                       143
ஆங்குவம்மின் வம்மினென வாரணம்பு னைந்தவடி வாகவந்த
                                    மைந்த ரகலா
தீங்குநின்மி னின்மினென வாகமுண்ட வின்பமிக யாரும்வந்த
                                    ருந்த வரவே
தாங்கள்வம்மின் வம்மினென யாரும்வந்து மண்டலொடு
                                    தாவிமுன்பு பின்பு
வரலா னீங்கநின்மின் நின்மினென மீமுழங்கெ ழுந்தநகர்
                          நீடுநின்று நின்று பெயர்வார்.
 
ஆங்கு, "வம்மின், வம்மின்!" என, "ஆரணம் புனைந்த வடிவு
                             ஆக வந்த மைந்தர், அகலாது
ஈங்கு நின்மின், நின்மின்!" என, ஆகம் உண்ட இன்பம் மிக, யாரும்
                             வந்து அருந்த வரவே,
"தாங்கள் வம்மின், வம்மின்!" என, யாரும் வந்து மண்டலொடு,
                             தாவி முன்பு பின்பு வரலால்,
"நீங்க நின்மின், நின்மின்!" என, மீமுழங்கு எழுந்த நகர் நீடு
                             நின்று நின்று பெயர்வார்.