பக்கம் எண் :

முதற் காண்டம்267

வருந்தின என, அவ்விருவரைப் பின் தொடர்ந்து செல்லவே, தாவிதனின்
அரசகுலத்தைச் சார்ந்த அவ்விருவரும் ஞாயிறும் திங்களுமாகிய கிரகங்கள்
ஒளி தந்து நீங்கிய முறையில் தெரு முனை தோறும் நின்று நின்று அகன்று
நகர்வர்.

     போகுது - 'போகிறது' என்ற சொல்லின் மரூஉ..
 
                         145
மாசையுற்று ருண்டவுரு டேருருட்டி வந்தவழி மாசையுற்றொ
                                    ளிர்ந்த தனைய
வாசையற்றெ ழுந்ததவர் போகமுற்றி டங்கடொறு மாரணத்த
                                    னந்த நயனாய்ப்
பூசையுற்ற வும்பரிசை பாடலுற்ற கன்றவழி போயொளித்த
                                    குந்த முறையுள்
நாசரெத்தை யென்றநகர் தாமடுத்த டைந்துறைவர் நானடுத்தி
                                    றைஞ்சு மவரே.
 
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை
                        உற்று ஒளிர்ந்தது அனைய,
ஆசை அற்று எழுந்த தவர் போக, முற்று இடங்கள் தொறும்
                        ஆரணத்து அனந்த நயன் ஆய்,
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய்,
                        ஒளித் தகும் தம் உறையுள்,
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து, அடைந்து உறைவர்,

     நான் அடுத்து இறைஞ்சும் அவரே. பொன்னால் செய்து உருண்ட
உருளைகளைக் கொண்டுள்ள தேரை உருட்டி வந்த இடம் பொன்னை
அடையப் பெற்று ஒளிர்ந்ததுபோல, ஆசையை அறுத்து உயர்ந்த
தவத்தோராகிய சூசையும் மரியாளும் நடந்துபோகவே, போன இடந்தோறும்
முழுமையாக வேதத்தின் முடிவில்லாத நன்மைகள் விளைவித்து, வணக்கம்
கொண்ட வானவர் இசை பாடிக்கொண்டுவர நீண்ட வழிபோய், நான்
அடுத்துச் சென்று வணங்கும் அவ்விருவரும் நாசரெத்தை என்ற தம்
நகரத்தை அடைந்து, ஒளியுடன் விளங்கும் தம் உறைவிடமாகிய இல்லத்தை
அடைந்து தங்குவர்.