146
|
ஏதமங்கொ
ழிந்ததென நோவணங்கொ ழிந்துநிறை யேசிலின்ப
டைந்து கடவுள்
பாதமங்கெ ழுந்ததென ஞானமங்கி லங்கவிவர் பாழிவந்த
டைந்த பொழுதே
யோதமங்கெ ழுந்ததென வூரினின்ற டங்கலரு மோடிவந்த
டர்ந்து மழைகொள்
சீதமங்க திர்ந்ததென வாய்மலர்ந்த றைந்தபுகழ் சேணழுந்த
மண்டு மொலியே. |
|
ஏதம் அங்கு ஒழிந்தது
என நோவு அணங்கு ஒழிந்து, நிறை ஏசு
இல் இன்பு அடைந்து, கடவுள்
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி
வந்து அடைந்த பொழுதே,
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து
அடர்ந்து மழைகொள்
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண்
அழுந்த மண்டும் ஒலியே. |
கடவுளின் திருவடிகளே
அங்கு எழுந்தருளியது போலத் தெய்வ
ஞானம் ஒளிசெய்ய இவர்கள் தம் நகரத்தை வந்தடைந்த போதே,
குற்றமெல்லாம் அங்கு ஒழிந்ததுபோல வருத்தமும் துன்பமும் ஒழிந்து.
இகழ்ச்சி இல்லாத நிறைந்த இன்பம் அடைந்து, கடலே அங்குப் பொங்கி
வந்ததுபோல ஊரிலுள்ள மக்கள் அடங்கலும் ஓடிவந்து திரண்டு,
குளிர்ச்சிகொண்ட மழை மேகம் முழங்கியதுபோல அங்கு வாய்திறந்து
கூறிய புகழ்ச்சியின் ஒலி வானத்தில் சென்று அழுந்துமாறு பெருகும்.
'மழை கொள் சீதம்'
என்பதனைச் 'சீதம் கொள் மழை' என மாற்றுக.
147
|
அருகுமண்ட
வந்தகொழு விழியுவந்த ருந்துநய னளவகன்று
வந்து மிடையப்
பெருகுமண்டெ ழுந்ததுகள் வெளியில்மண்டி மண்டுமிருள்
பெருகலின்றி யங்கு குளிர
முருகுமண்ட மன்றுமழை யனையவம்பு மிழ்ந்தமலர்
முடுகிநின்ற மைந்த ருளமே
பருகுமண்ட னந்தவரு ளரிதுசிந்து கின்றிருவர் பதியமைந்தெ
ழுந்து புகுவார். |
|