பக்கம் எண் :

முதற் காண்டம்269

அருகு மண்ட வந்த கொழு விழி உவந்து அருந்து நயன்
                 அளவு அகன்று வந்து மிடைய,
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி, மண்டும்
                 இருள் பெருகல் இன்றி அங்கு குளிர
முருகு பண்ட, மன்று மழை அனைய, வம்பு உமிழ்ந்த மலர்
                 முடுகி நின்ற மைந்தர் உளமே
பருகு மண்டு அனந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர்
                 பதி அமைந்து எழுந்து புகுவார்.

     அவ்விருவர் அருகே நெருங்கி வந்து பார்த்த கொழுமையான கண்கள்
மகிழ்ந்து அருந்திய இன்பம் அளவில் அடங்காததென்று கண்டு எல்லோரும்
வந்து திரளவே, பெருகித் திரண்டு எழுந்த தூசி ஆகாய வெளியில் திரண்டு,
அவ்வாறு மண்டிய இருள் பெருகுவதற்கு இடமில்லாமல் அங்கு வாசனையே
குளிர்ச்சியோடு மண்டுமாறு, வாசனை மழை போன்று, வாசனையைப்
பொழிந்த மலர்களை விரைவாகத் தூவி நின்ற மக்கள் உள்ளங்களெல்லாம்
பருகத் தக்கவாறு பெருகுகின்ற முடிவில்லாத அருளை அரிய தன்மையாய்ச்
சிந்துகின்ற இவ்விருவரும் தம் நகரத்திற்குத் தாம் எண்ணியவாறு வந்து
புகுவர்.

     சிந்துகின்றிருவர் - சிந்துகின்ற + இருவர்; 'சிந்துகின்ற விருவர்'
என்பதன் தொகுத்தல் விகாரம்.
 
                           148
விதியெழுந்தொ ளிர்ந்தமறை வடிவணிந்த னந்ததவன்
                    விருதணிந்த டைந்த தெனவான்
மதியெழுந்தொ ளிர்ந்தவடி மரியெழுந்த டைந்ததென
                    மனமெழுந்து வந்த முறையா
னிதியெழுந்தொ ளிர்ந்தவுல குளரெழுந்த டர்ந்துவர
                    நிறையமண்டு நின்ற நசைசெய்
பதியெழுந்தொ ளிர்ந்தநகர் புகுவரின்பு மிழ்ந்துபுவி
                    பரிவொடும்பு ரந்த விவரே