விதி எழுந்து
ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அனந்த
தவன் விருது அணிந்து அடைந்தது என, வான்
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தது என
மனம் எழுந்து உவந்த முறையால்,
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர,
நிறைய மண்டுகின்ற நசை செய்
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர், இன்பு உமிழ்ந்து புவி
பரிவொடும் புரந்த இவரே. |
விதிமுறைகளின்
சிறப்பினால் பிறவேதங்களிலும் மேலாக எழுந்து
ஒளிர்ந்த வேதத்தின் வடிவங்கொண்டு, கடவுளே தந்த மலர்க் கொடியைக்
கையில் தாங்கிய வண்ணம் அளவற்ற தவத்தோனாகிய சூசை வந்தான்
எனவும், வானிலுள்ள பிறை மதி மீது எழுந்து நின்று ஒளிர்ந்த கால்களை
உடைய மரியாள் கூடவே எழுந்தருளி வந்தாள் எனவும் தங்கள் மனம்
எழுச்சி பெற்று மகிழ்ந்த தன்மையால், எல்லா உலகங்களிலும் உயர்ந்து
ஒளிர்ந்த பொன்னுலகிலுள்ள வானவர்கள் எழுந்து திரண்டு வர,
இன்பத்தையே எங்கும் பொழிந்து இவ்வுலகத்தை அன்போடு பேணிக்
காத்த இவ்விருவரும், நிறைந்து பொங்குகின்ற ஆசையைத் தரும் பிற
பதிகளுக்கெல்லாம் மேலாக உயர்ந்து நின்று ஒளிர்ந்த நாசரெத்தை நகர்
வந்து புகுவர்,
'எழுந்து ஒளிர்ந்த
நிதி உலகு' என மாற்றிக் கூட்டுக,
149
|
தவடைந்த
வெந்தைதிரு வடிகளங்கி லங்கவழி தரவரங்கொ
ளங்க ணிருவர்
புகமருங்கெ ழுந்தமறை புகநிறைந்த டர்ந்தவருள்
புகவறஞ்செ றிந்து புகவே
முகமலர்ந்து வந்தமரர் குடியமைந்து றைந்தநகர் முதிரனந்த
முண்ட முறைக
ளகமலிந்து ணர்ந்ததமிழ்க் கலைவருந்து கின்றதொடை
யளவினின்ற டங்க முறையோ. |
|