மேகத்தினிடையே
மறைந்த பகலவன் போல அங்கு நுழைந்து
கொள்வாரெனினும், எங்கும் உள்ளவர்களும் காண வேண்டுமென்ற
ஆசை தோன்றி உள்ளம் பொங்க அங்கு வரவே, தேனைச் சொரியும்
வாசனையுள்ள மலர்கள் விரியவும் வண்டுகள் வந்து மொய்ப்பதுபோல்
தெளிந்த அரிய அழகு படைத்த இவ்விருவர்மீது அவர்களின் உள்ளமும்
கண்களும் படிந்து கிடக்கும்.
153 |
திங்களையு
ரிஞ்சொளியை மங்கரிய தாளினலாள்
நங்கையரை ஞானமிகு தங்கவுரை சாற்றலொடு
மாலைமது வாகைவள னூலையறை நூழையுரை
யாலைமது வாகநிறை வேலைமடு விட்டதுபோல். |
|
திங்களை உரிஞ்சு
ஒளியை மங்கு அரிய தாளின் நலாள்
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு,
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை,
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல். |
சந்திரனைத்
தேய்க்கும் தன் ஒளியில் மங்குதற்கு அரிய கால்களை
உடைய நல்லவளாகிய மரியாள் அங்கு வந்த மகளிரிடம் ஞானம் மிகுதியாகத்
தங்குமாறு அறிவுரை கூறுதலோடு, மால் போல் தேன் நிறைந்த மலர்க்
கொடியை உடைய சூசை ஆடவர்க்கும் நூலை விரித்துக் கூறும் நுட்ப உரை,
கரும்பாலையின் சாறாக நிறைந்த ஒரு கடலைப் பள்ளத்தில் திறந்து விட்டது
போல் அமையும்.
'அமையும்'
என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது 'நங்கையரை'
என மரியாளுக்குப் பிரித்துக் கூறவே, வளன் உரை ஆடவர்க்கென்பது
பெறப்பட்டது.
154
|
இவ்வுலகுள்
ளாயபொழு தவ்வுலகு மாவலுறச்
செவ்வொழுகு தேவனருள் வவ்வுமிரு மைந்தரிணை
சேர்த்துமண மாக்கலிவர் நீர்த்தமண நேரியதோ
தோர்த்ததென வோவெனவுள் ளார்த்தறைகு வார்சிலரே. |
|