பக்கம் எண் :

முதற் காண்டம்276

வேதத்தை இவர்கள் தங்கள் வாழ்க்கையால் எடுத்துக்காட்டுவர்; மீண்டும்
அவ்வேதம் வாழ்க்கைக்கு மேற்கோளாக இவர்களையே எடுத்துக்காட்டும்;
இதனை நாம் இங்கு நாளாவட்டத்தில் கண்டறிவோம்." என்றும் சொல்வர்.

     இரு கல்: வேத ஒழுக்கத்தின் சாரமாக விளங்கும் பத்துக்
கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகள். விவரம்: 18வது, சீனயி
மாமலை காண் படலம், 13 - 23 காண்க.
 
                          158
பொய்வினைபி ரித்தநயன் மெய்வினையு ணர்த்துமிவர்
செய்வினைய ளிக்குமென நொய்வினைகு றித்தபரன்
மண்ணுலகும் வானுலகு நண்ணுமுற வோடுறநா
ளண்ணுமென வின்னமண மெண் ணுமெனு மோர்சிலரே.
 
"பொய் வினை பிரித்த நயன், மெய்வினை உணர்த்தும் இவர்
செய் வினை, அளிக்கும் என நொய் வினை குறித்த பரன்,
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள்
அண்ணும் என, இன்ன மணம் எண்ணும்." எனும் ஓர் சிலரே.

     ஒருசிலர், "மெய்யோடு பொருந்திய செயல்களை உணர்த்திய
தன்மையாய் இவர்கள் செய்யும் செயல்கள், பொய்யோடு பொருந்திய
செயல்களினின்று தம்மைப் பிரித்துக் கொள்வதனால் உண்டாகும்
நன்மையை இவ்வுலகத்தவர்க்குத் தந்து உதவுமென்று தன் நுட்பமான
செயற்பாட்டினால் கருதிய ஆண்டவன், மண்ணுலகும் விண்ணுலகும்
நெருங்கிய உறவோடு பொருந்தும் நாள் அடுத்து வருவதென்று கண்டு,
இந்தத் திருமணத்தை எண்ணிச் செய்வதாயினான் போலும்." என்று
பேசிக்கொள்வர்.
 
                     159
முனியவளி மொய்த்ததுணர் குனியவுமிழ் தேறலினுங்
கனியவிவை யோதுதலி னினியவிரு போதுமுறி
நனைவருமி ரண்டுபெயர் வனைவரும ணம்பெறலாற்
புனைவரும னந்தமுறி யனைவரும கிழ்ந்தனரே.