மணம் புரிந்துகொண்ட
மாதவன் சூசையும் கன்னி விரதம் பூண்ட
மரியாளும் ஈரறமும் ஒரறமாய்க் கொண்டு வாழ்ந்த சிறப்பைக் கூறும் பகுதி.
சிக்கலான
கருத்துப் பரிமாற்றம்
- - காய், -
- காய், - - காய், - - காய்
1
|
சுலவுற்ற
திரையாழி சூழ்புவனந் தாங்குகின்ற
வலைவுற்ற வுயிர்கெல்லா மாதரவாந் திருமணத்தா
னிலவுற்ற பதத்தாளு நீர்மலர்க்கோற் பூமானு
முலைவுற்ற வுளத்தஞ்சி யுளைந்திரங்கி வருந்தினரே |
|
சுலவு உற்ற திரை
ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால்,
நிலவு உற்ற பதத்தாளும் நீள் மலர்க் கோல் பூமானும்
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே.
|
சுழலும் தன்மையுள்ள
அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகம்
சுமந்து நிற்கின்ற சிற்றின்ப உணர்வால் அலையும் உயிர்களுக்கெல்லாம்
ஆதரவாக அமைந்துள்ள திருமணத்தை முன்னிட்டு, பிறைச் சந்திரன் மீது
பொருந்திய பாதத்தை உடைய மரியாளும் குளிர்ந்த மலர்க்கோலைத்
தாங்கிய மேலோனாகிய சூசையும் கலக்கமுற்ற தத்தம் உள்ளத்தில் அஞ்சி
நொந்து இரங்கி வருந்தினர்.
2
|
தேன்வழங்கும்
பூந்துறையாஞ் செழுவாகை யேந்துதவன்
வான்வழங்கு மிறையோன்றான் மனமெழமுன்
னுணர்த்தமையால்
மீன்வழங்கு முடியாடன் விளம்பரிய மாட்சியொடு
கான் வழங்குந் தவப்புங்கங் கணித்தவளை வணங்குவனால் |
|