காப்பிய
ஆசிரியன்
மறைமொழி
வாயினன் மலிதவத்து இறைவன் 35
நிறைமொழிக்
குரவன் நிகர்இல் கேள்வியன்
வீரமா முனிஎன்போன் வியன்தமி ழாக
நீர்அளாம் உலகுஎழ நீர்த்துஉரைத் தனன்என,
காப்பியப்
பகுப்பு
சூசை
ஏந்திய துளிமதுப் பூங்கொடி
மாசை ஒளிமடல் வகுத்த நறுமலர் 40
ஆறுஅறு நூறுசேர் ஐம்மூன்று இறைஞ்சிக்கொய்து,
ஆறுஅறு நூறுசேர் ஐம்மூன்று பாவாய்,
ஆறுஅறு அணிநிரைக்கு அம்மலர் விசித்தென,
ஆறுஅறு படலமாய் அருங்கதை அளவுஎன,
காப்பியப்
பயன்
நான்மறை
மறைய நவின்றஇத் திருக்கதை 45
நூல்மறை காட்டு நுணங்கிய வழிஎன,
பொய்யாக் குணத்தனி பொலிந்தமெய்க் கடவுளை
நையாக் கருத்தொடு நயப்புஉற அடைதலும்,
அறம்பொருள் இன்பம்ஈங் காலே நுகர்தலும்,
திறம்புஇல வீடு செல்கதி எய்தலும்
50
பொழிந்த மதுவொடு புவனத்து எவர்க்கும்
மொழிந்தஇக் கதைதரு முப்பயன் இவைஎன,
உரைப்
பயன்
ஆகையான்,
வானோர் துதிப்ப வான்மேல் தந்தே
மீனோர் கதிஉற இசைந்தன வழிஎன 55
மூவுலகு ஏற்றும் முதிர்அருட் கிழத்தி
பூவுலகு அறியப் புகன்ற காதை
நூற்கடல் கடந்து நுனித்ததென் மலைஉறீஇ
நாற்கடல் கவியொடு நறுந்தமி ழாக
மீட்டுஅப் பயன்என, விருப்பொடு கனியக் 60
கேட்ட அனைவரும் கிளர்வினைப் பகைகெடப்
பெரும்பயன் உறும்படி பேதை மொழியுடன்
அரும்பயன் உணர்ந்துஉரை அறைகுது நானே.
36.
குரவன் - குரு. 41.
6 x 600 + 5 x 3 = 3615.
42. 6 x 6 =
36. 49. ஈங்கால்
- இவ்வுலகில்.
61. வினை - பாவச்
செயல். 63. அறைகுது
- சொல்வேன்.