பக்கம் எண் :

முதற் காண்டம்305

"உணங்கிய மரத்திற்கு உயிர் வரும் பெய்த உறை என
                       வருதியே! உலகிற்கு
இணங்கிய இருளைச் சீய்க்க வெங் கதிர் கொள் இரவி
                       போல் வருதியே! எஞ்சாது
அணங்கு இயற்றிய வெம் பழம் பழிக் கூளிக்கு அரி என
                       வருதியே! உன்னை
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும்
                       என வருதியே!" என்றான்.

     "வாடிய மரத்திற்கு உயிர் வருமாறு பெய்த மழை போல் நீ மனிதனாய்
அவதரித்து வருவாயாக! இவ்வுலகிற்கு இணக்கமான இருளை ஒழிக்க
வெப்பமான கதிர் கொண்ட ஞாயிறு போல் வருவாயாக! ஓயாமல் துன்பம்
செய்யும் கொடிய பழம் பழியை மனிதர் மீது கொண்டுள்ள பேய்க்கு அரிமா
போல் வருவாயாக! உன்னை வணங்கின நல்லோர்க்கு அருள் புரிந்து
அன்னை வருவதுபோல் வருவாயாக!" என்று சூசை முடித்தான்.
 
                         43
சூன்மலி முகில்பெய் மாரியாற் பெருகிச் சுருட்டலை கரையகட்
                                          டடங்காத்
தேன்மலி காவுங் கழனியு நிறைப்பத் திரைபுரண் டுலவிய வண்ண
நூன்மலி யோகத் துணர்ந்தவை பொங்கி நுதலிய விவற்றொடு
                                          பலவுந்
தான்மலி யுவப்பிற் சாற்றுவா னுயர்வான் றளந்தொழுந் தவத்திறை
                                          யென்பான்.
 
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி, சுருட்டு அலை கரை அகட்டு
                                           அடங்கா,
தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம்,
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி, நுதலிய இவற்றொடு                                            பலவும்
தான் மலி உவப்பின் சாற்றுவான், உயர் வான் தளம் தொழும் தவத்து
                                           இறை என்பான்.