30
|
வாய்ந்த
செந்நெலை மறுகும் பண்டியு
மாய்ந்த மெல்லிலை யமையும் பண்டியும்
பாய்ந்த பூகவொண் பழம்பெய் பண்டியும்
வேய்ந்த தீங்கனி விம்மும் பண்டியும் |
|
வாய்ந்த
செந் நெலை மறுகும் பண்டியும்,
ஆய்ந்த மெல் இலை அமையும் பண்டியும்,
பாய்ந்த பூக ஒண் பழம் பெய் பண்டியும்,
வேய்ந்த தீம் கனி விம்மும் பண்டியும், - |
விளைச்சலாற்
கிடைத்த செந் நெல்லைச் சுமந்து திரியும் வண்டிகளும்,
ஆயந்தெடுத்த மெல்லிய வெற்றிலை கொண்டுள்ள வண்டிகளும், வானுற
வளர்ந்த கமுகின் ஒளி பொருந்திய பழங்களை இட்டு வைத்த வண்டிகளும்,
அழகிய இனிய கனிகள் நிரம்பிக் கிடக்கும் வண்டிகளும் -
இப்பாடல் குளகம்.
தன்னிலே பொருள் நிறைவு பெறாத பாடல்
குளகம் எனப்படும். இப்பாடலும் அடுத்த பாடலும் குளகமாய், 32ஆம்
பாடலின் 'நெருங்கித் தேயுமால்' என்ற தொடரோடு பொருள் நிறைவு பெறும்.
'மெல் இலை' என்பதனை 'வாயிலிட்டு மெல்லும் வெற்றிலை' எனவும்
பொருள் கொள்ளலாம். பூகம் பழம் - பழப் பாக்கு. தீம் கனி - மா, பலா,
வாழை என்னும் முக்கனிகளும் பிற கனிகளுமாக இனியவை எல்லாம்
கொள்க.
31
|
பன்னுந்
தேங்கிள நீர்பெய் பண்டியும்
துன்னுந் தீங்கழை சுமக்கும் பண்டியும்
மின்னுந் தேன்செறி வீபெய் பண்டியு
மன்னுந் தேசுபன் மணிகொள் பண்டியும் |
|
பன்னும்
தேங்கு இளநீர் பெய் பண்டியும்,
துன்னும் தீம் கழை சுமக்கும் பண்டியும்,
மின்னும் தேன் செறி வீ பெய் பண்டியும்,
மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும், - |
|