விசாரிப்பாவது,
பிறர் குறையைக் கண்டும் கேட்டும் அறிந்து
இயன்றவாறெல்லாம் உதவுதலாம். உயிர்களாகிய உடல்களுக் கெல்லாம்
தாமே உயிராக நின்று உதவின ரென்பது கருத்து.
59 |
தாழு
பான்மையோர் தகவுடை பான்மையோ ரென்னா
சூழும் யாரையுஞ் சூழ்ந்துசூழ் வருநயஞ் செய்வார்
கீழு மேலுமென் றுணர்கிலா துறப்பெலாங் கிளர்ப்ப
வாழு மேயுயிர் மலிந்துட லுலவிய போன்றே. |
|
தாழு பான்மையோர்
தகவு உடை பான்மையோர் என்னா,
சூழும் யாரையும், சூழ்ந்து, சூழ்வு அரு நயம் செய்வார்,
கீழும் மேலும் என்று உணர்கிலாது, உறுப்பு எலாம் கிளர்ப்ப
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே. |
உறுப்புகளிடையே
கீழானவை மேலானவை என்று வேற்றுமை
உணலராமல் உறுப்புகளெல்லாம் ஒன்றாகச் சிறக்கும்படி, உடலில் வாழும்
உயிர் உடலெங்கும் நிறைந்து உலாவிக் கொண்டிருக்கும். அது போல,
அவ்விருவரும், தாழ்ந்த தன்மை உடையோர் உயர்வு கொண்ட தன்மையோர்
என்று வேற்றுமை பாராட்டாமல், தம்மைச் சுற்றிலும் வாழ்ந்த யாவரையும்
நலம் விசாரித்து, நினைத்தற்கு அரிய நன்மையெல்லாம் செய்வர்.
வாழுமே உயிர்
என்பதனை வாழும் உயிரே என மாற்றிக் கூட்டுக.
60 |
துய்யந்
தாயுரித் துடர்பினார் சுடப்புகன் றவர்க்கு
மய்யந் தாவிய மனத்தெழு மன்பினன் றியற்றல்
நொய்யந் தாதுகள் நோகவுட் குடைந்திமி ரளிக்குஞ்
செய்யந் தாமரை திளைப்பநல் விருந்திடும் போன்றே. |
|
துய் அம் தாய்
உரித் தொடர்பினார் சுடப் புகன்றவர்க்கும்
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல்,
நொய் அம் தாதுகள் நோக உள் குடைந்து இமிர் அளிக்கும்
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே. |
|