பக்கம் எண் :

முதற் காண்டம்319

     தூய அழகிய தாய்க்குரிய அன்புள்ள அவ்விருவரும் தம் நெஞ்சைச்
சுடுமாறு கொடுஞ்சொல் கூறியவர்க்கும் நடுவு நிலைமை பொருந்திய தம்
மனத்தில் எழும் அன்பினால் நன்மையே புரிவர். அது, தன் நுண்ணிய
அழகிய இதழ்கள் நோகுமாறு உள்ளே குடைந்து இரையும் வண்டுக்கும்
செந்நிறமான அழகிய தாமரை மலர் அதன் வயிறு நிரம்ப நல்ல தேனை
விருந்தாக அருந்தக் கொடுப்பது போல் அமையும்.

     'அமையும்' என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. மய்யம் - 'மையம்'
என்ற சொல்லின் முதற் போலி.
 
                    61
வாய்ந்த மாண்பினர் வருந்தலுஞ் செய்குவர்க் குள்ளந்
தோய்ந்த வார்வுறத் துறவிய நலநிறை யளித்தல்
காய்ந்த வாலையின் கரும்பினை முறுக்குதற் களவி
லீய்ந்த பாகினி திரிந்தெலா நிறைந்தன போன்றே.
 
வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம்
தோய்ந்த ஆர்வு உறத் துறவிய நலம் நிறை அளித்தல்,
காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில்
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே.

     மாண்பு வாய்ந்தவராகிய சூசையும் மரியாளும் தமக்கு வருத்தம்
தரும் செயலைச் செய்பவர்க்கும் உள்ளம் தோய்ந்த ஆர்வத்தோடு திரண்ட
நன்மைகளை நிறைவாகக் கொடுப்பர். அது, அலையில் இடப்பட்ட காய்ந்த
கரும்பை முறுக்கிப் பிழியும் அளவிற்கு அது தந்த சாறு இனியதாக
வெளிப்பட்டு எல்லா இடமும் நிறைந்ததுபோல் அமையும்.
 
                   62
வருந்தி னார்முகத் தெழுதிய வருத்தமே கண்டால்
விருந்தி னார்முகத் தழைத்தவர்க் கூட்டிய மிடைதேன்
றிருந்தி னார்முகத் துரைத்தசொல் திளைமதுச் செவியா
லருந்தி னார்முகத் தெழுநயக் கடலினாழ்ந் தகல்வார்.