பக்கம் எண் :

முதற் காண்டம்320

வருந்தினார் முகத்து எழுதிய வருத்தமே கண்டால்,
விருந்தினார் முகத்து அழைத்து, அவர்க்கு ஊட்டிய
                                   மிடைதேன்
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மதுச்
                                   செவியால்
அருந்தினார், முகத்து எழு நயக் கடலின் ஆழ்ந்து
                                   அகல்வார்.

     வருந்தி வந்தவர் தம் முகத்தில் எழுதிக் காட்டியது போன்ற
வருத்தத்தை இவ்விருவரும் காண நோர்ந்தால், அவரை விருந்து
உபசரிப்பவர்க்கு ஒத்த முகத்தோடு எதிர்கொண்டு அழைத்து வருவர்.
அவர்க்குத் தாம் ஊட்டிய திரண்ட தேன் போல் திருந்திய இனிமை
நிறைந்த முகத்தோடு இன்சொல் உரைப்பார். வருந்தி வந்தோர் இவ்விருவர்
உரைத்த சொல்லாகிய நிறைந்த மதுவைச் செவியால் அருந்தியவராய்,
இவ்விருவர் முகத்தினின்று பிறக்கும் இன்பமாகிய கடலில் ஆழந்து
வருத்தம் நீங்கித் திரும்புவர்.
 
                  63
கூர்ந்த நன்மையைக் கூறிய பயனினா லெவருஞ்
சேர்ந்த தன்மையிற் செயிரற வோங்கிவே றாவா
ரார்ந்த பொன்வரை யடுத்துறை காகமுங் கருமை
பேர்ந்து பொன்வரை பேரெழில் பிளிர்ந்தன போன்றே.
 
கூர்ந்த நன்மையைக் கூறிய பயனினால் எவரும்
சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார்,
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை
பேர்ந்து பொன் வரை போர் எழில் பிளிர்ந்தன போன்றே.

     ஒளி நிறைந்த பொன் மலையை அடுத்துத்தங்கும் காகமும் தன்
கருமை நிறம் நீங்கிப் பொன் மலையின் பேரழகோடு விளங்கியது போல்,
அவ்விருவரும் சிறந்த நன்மையை எடுத்துக்கூறிய தன் பயனாக எவரும்
தாம் அங்கு வந்து சேர்ந்த தன்மையினால் குற்றமெல்லாம் நீங்கி
உயர்ந்து வேறாகுவர்.