'ஈயும்
பொருட்டும் உழைத்தனர்' என்றதனால், தாம் உண்ணும்
பொருட்டும் உழைத்தனர் என்பதும், முன்தொகுத்த விடத்தும் தம்
உணவுக்கெனவும் ஒதுக்கி வைத்திலர் என்பதும் பெறப்படும். மழைநீர்,
விளைச்சலாலும் சமையல் துணையாலும் உணவை அமைத்துக் கொடுப்பதோடு,
பருகும் நீராய் உணவுத் துணையாகவும் அமைதல் காண்க. "அன்பிலார்
எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார், என்பும் உரியர் பிறர்க்கு" என்ற
குறளும் (72) "துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத், துப்புஆய
தூஉம் மழை" என்ற குறளும் (12) ஈண்டு நினைக்கத்தக்கன. என்பு-எலும்பு:
ஆகுபெயராக உடம்பைக் குறித்தது. தந்தின்-தந்தால்: ஆயின், ஆனால்
என்ற சொல்லமைதிபோல் இங்குக் கொள்ளப்பட்டது.
66 |
சிறுமை யார்துயர்
சிதைத்திரந் தாயினு மளித்த
வறுமை யார்பலர் வறுமைதீர் திருவின ராகி
யுறுமை யார்முகி லுறையிரந் துயிர்க்கெலா முகுத்த
நறுமை யார்நளிர் நறாமலர் வாவியே போன்றார். |
|
சிறுமையார் துயர்
சிதைத்து இரந்து ஆயினும் அளித்த
வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி,
உறுமை ஆர் முகில் உறை இரந்து, உயிர்க்கு எலாம்
உகுத்த
நறுமை ஆர் நளிர் நறா மலர் வாவியே போன்றார். |
செல்வச் சிறுமை
உடைய வறியவரின் துயரத்தை அழிக்கும்
பொருட்டுத் தாம் பிறரிடம் இரந்து பெற்றாயினும் கொடுத்து உதவிய
வறியவராகிய சூசையும் மரியாளும் பலர் தம் வறுமையைப் போக்கக்கூடிய
செல்வம் உடையவராய் விளங்கினர். அதனால். மிக்க கருநிறம் கொண்ட
மேகத்தினிடம் மழைத்துளிகளை இரந்து பெற்று, அந்நீரை
உயிர்களுக்கெல்லாம் தானமாகச் சொரிந்த நறுமணம் நிறைந்த குளிர்ந்த
தேனை உடைய தாமரை மலர்த் தடாகத்திற்கு நிகராயினர்.
பெற்ற நீரைத் தடாகம் வாய்க்காலால் பயிர்களுக்கும், நில ஊறலால்
மரங்களுக்கும், உண்ணவும் கழுவவும் உயிர்களுக்கு உதவுதல் காண்க.
|