67 |
தாயொத்
தார்வொடு தரித்திரர்க் கனைத்துமே யாகித்
தீயொத் தாகுலந் தீர்த்துளங் குளிரவண் முகிலாய்ப்
போயொத் தாலதைப் பெயர்க்கணி யொத்தனர் பெயரா
நோயொத் தாயகா னுகர்ந்துயிர் தருமருந் தொத்தார். |
|
தாய் ஒத்து ஆர்வொடு
தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி,
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய்,
பேய் ஒத்தால் அதைப் பெயர்க்க அணி ஒத்தனர்; பெயரா
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார்
|
அவ்விருவரும்
தாய் போன்று அன்போடு வறியவர்க்குத் தாமே
அனைத்துமாய் அமைந்தனர். தீயைப் போன்ற துயரங்களைத் தீர்த்து மனம்
குளிரச் செய்தலில் வளமான மழை மேகம் போல் ஆயினர்; யாரையேனும்
பேய் வந்து அடுத்தால், அதனைப் பெயர்த்து ஒட்டுதலில் படையணி
போன்று உதவினர்; நீங்காத நோய் வந்து அடுத்துத் துன்பம் ஏற்பட்டவிடத்து, எடுத்து
அருந்துவதனால் உயிரை மீட்டுத்தரும் மருந்துபோல் ஆயினார்.
ஒத்த + ஆகுலம்
-- ஒத்தவாகுலம்; பெயர்க்க + அணி --
பெயர்க்கவணி: இவை முறையே 'ஒத்தாகுலம்' எனவும் 'பெயர்க்கணி'
எனவும் தொகுத்தல் விகாரம் கொண்டன.
68 |
பொய்யெ
னப்படர் புழைப்படக் குடைந்தபுண் ணுடலை மெய்யெ னத்தயை வேர்விடு நெஞ்சினார்
நோக்கி யையெ னத்தமுள் ளிரங்கிய தன்மையோ டப்புண் ணொய்யெ னக்கதி ருதித்திரு
ளெனமறைந் ததுவே. |
|
பொய் எனப்
படர் புழைப் படக் குடைந்த புண் உடலை,
மெய் எனத் தயை வேர்விடு நெஞ்சினார், நோக்கி,
'ஐ!' எனத் தமுள் இரங்கிய தன்மையோடு, அப்புண்
ஒய் என, கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே. |
|