பக்கம் எண் :

முதற் காண்டம்327

 
கானகத் துறவு ஆயினர் இன்னணம் கனிவாய்
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார்,
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன்
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே.

     ஆன்டவன் உருவத்தோடு வெளிப்படுமாறு மனித இயல்போடு
தெய்வ இயல்பையும் ஊனுடலின் உள்ளே பொருந்தத் தன்
வல்லமையைக் கொண்டு அமைத்த தம்மை போல, காட்டிடத்தே
நடத்தும் துறவை வீட்டிடத்து அமைத்துக் கொண்ட இவ்விருவரும்
வானகத்தோடு உறவு கொண்டுள்ள இல்லறத்தை இவ்வாறு இனிதே
நடத்தினர்.

           ஈரறம் பொருத்து படலம் முற்றும்

             ஆகப் படலம் 6க்குப் பாடல் 526