2 |
தண்படு கொழுகொம்
பூன்றித் தலைபடர் வல்லி யன்ன
தெண்படு மதுப்பூ வாகை சேர்ந்தநற் றுணைவ னோடு
விண்படு முடுக்கள் சூழ்ந்த விரைக்கொடிக் கன்னி யிவ்வா
றெண்படு மளவற் றாய்த்த வீரறம் புனைந்த நாளில். |
|
தண் படு கொழுகொம்பு
ஊன்றித் தலை படர்வல்லி அன்ன,
தெண் படு மதுப் பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு,
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரைக் கொடிக் கன்னி, இவ்வாறு
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில், |
குளிர்ச்சி
பொருந்திய கொழுகொம்பின் மீது படிந்து மேலே படரும்
கொடியைப் போன்று, தெளிந்த தேனுள்ள மலர்க் கொடியை ஏந்திய நல்ல
துணைவனாகிய சூசையோடு, வானத்திலுள்ள விண்மீன்களை முடியாக
அணிந்த மணமுள்ள மலர்க்கொடியாகிய கன்னிமரியாள், எண்ணத்தக்க
அளவற்ற விதமாய் ஆராய்ந்து கண்ட இல்லற துறவறங்கள் ஒன்றாக
இணைந்த ஈரறத்தை ஓரறமாக இவ்வாறு மேற்கொண்டு ஒழுகி வந்த நாளில்,
இது
குளகப் பாட்டு, அடுத்த பாடலோடு தொடர்ந்து பொருள்
நிறையும்.
3 |
குணிக்கருங்
கருணை யார்ந்த குணத்தையா றமைந்த நாதன்
றணிக் கருங் குணுங்கை வென்று தரணியைப் புரந்து காக்கக்
கணிக்கரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றி றானீங்
கணிக்கரு முறையான் மைந்த னாகவுட் கருத்துற் றானே. |
|
குணிக்க அருங்
கருணை ஆர்ந்த குணத்தை ஆறு அமைந்த
நாதன்,
தணிக்க அருங் குணுங்கை வென்று தரணியைப் புரந்து காக்க,
கணிக்க அரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றில், தான் ஈங்கு,
அணிக்க அரு முறையால், மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே. |
|