ஓங்கி
வளர்ந்த தென்னையின் நெற்றுக்கள் முற்றிவிழுந்தன.
விழுகையில் அடியிலுள்ள வாழை, மா, வருக்கைப் பலா, ஆசினிப் பலா
ஆகியவற்றின் இனிய கனிகளைக் கூடவே சாய்த்தன. அவ்வாறு சாய்ந்த
கனிகளெல்லாம் சரிந்து தேன் கலந்து ஆற்று நீரில் சென்று சேர்ந்தன.
அதனால், அவ்வாற்று நீர் தோய்ந்த இடங்களெல்லாம் அதன் இனிமை
தோய்ந்து விளங்கின.
''காய்மாண்ட
தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப், பூமாண்ட
தீந்தேன் தொடை, கீறி வருக்கை போழ்ந்து, தேமாங்கனி சிதறி வாழைப்
பழங்கள் சிந்தும், ஏமாங் கதமென்று இசையால் திசைபோயது உண்டே'',
என்னும் சிந்தாமணிச் செய்யுள் (31) ஈண்டு நினைக்கத் தக்கது. கனி
தேன்புனல் சரிந்ததும், தோய்ந்த வாயெலாம் இனிமை தோய்ந்ததும்
முனிவர் காட்டிய புதுமை என்க.
34
|
வளைந்த
ளித்தகுங் கடலின் வாழ்வளை
யுளைந்த ளித்தமுத் தொருங்கு மற்றெலாந்
திளைந்த ளித்தலிற் றிருவென் றாண்டகை
விளைந்த ளித்தவை விருந்தென் றாமரோ |
|
வளைந்து
அளித்தகும் கடலின் வாழ் வளை
உளைந்து அளித்த முத்து, ஒருங்கு மற்று எலாம்
திளைந்து அளித்தலின், திரு என்று ஆண்டகை
வளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ |
பூமியைச் சூழ்ந்து
குளிர்ச்சியோடு விளங்கும் கடலில் வாழும் சங்கு
வருந்தி ஈன்று தந்த முத்தோடு மற்றுள்ள செல்வங்களெல்லாம் ஒன்று
சேரப் பிறர்க்கு விருப்பத்தோடு கொடுப்பர் சூதேய நாட்டார். அதனால்,
செல்வமென்று ஆண்டவன் விளைவித்துத் தந்தவையெல்லாம் அங்கு
விருந்து என்று ஆகும்.
35
|
பொறையி
னோடிகல் பொதிர்ந்த பொன்மணி
யுறையி னோடிக லுவந்தி டுங்கொடை
மறையி னோடிகல் முனிவர் மாண்புவான்
முறையி னோடிகல் முயன்ற நாடெலாம். |
|