பொறையினோடு
இகல் பொதிர்ந்த பொன் மணி;
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை;
மறையினோடு இகல் முனிவர் மாண்பு; வான்
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம். |
வானுலகில் வழங்கும்
முறைமைக்கு ஒத்தவாறு அறவாழ்வில் முயன்று
கொண்டிருந்த அச்சூதேய நாடு முழுவதும் குவிந்து கிடந்த பொன்னும்
இரத்தினங்களும் மலையை ஒத்திருக்கும். அந் நாட்டார் மகிழ்ந்து
இரவலர்க்கு இடும் கொடை, மழையை ஒத்திருக்கும். அங்குள்ள முனிவர்
தம் மாண்பு வேதத்தையே ஒத்திருக்கும்.
சோலை
வளம்
- விளம், - விளம், - மா, கூவிளம்
36
|
காமலர்
பெடைதழீஇ யன்னங் கண்படுந்
தேமலர்த் தடந்தழீஇச் சினைக ணீட்டிய
பூமலர்ப் பொழில்தழீஇப் பொலிந்த பொற்பெழுந்
தூமலர் வயறழீஇத் துளங்கு நாடதே |
|
காம்
அலர் பெடை தழீஇ அன்னம் கண்படும்
தேன் மலர்த் தடம் தழீஇ, சினைகள் நீட்டிய
பூ மலர்ப் பொழில் தழீஇ, பொலிந்த பொற்பு எழும்
தூ மலர் வயல் தழீஇப் பொலிந்த நாடு அதே |
அச்
சூதேயா நாடு ஆண் அன்னம் தன் ஆசை பெருகிய
பெட்டையைத் தழுவிக் கொண்டு துயிலும் தேனுள்ள தாமரை மலர்த்
தடாகங்கள் தழுவியும், கிளைகள் நீட்டிய அழகிய மலருள்ள சோலைகள்
தழுவியும், பொலிந்த அழகோடு எழுந்து நிற்கும் தூய மலர்களை உடைய
வயல்கள் தழுவியும் விளங்கும் நாடாகும்.
காம் - 'காமம்'
என்ற சொல்லின் இடைக்குறை.
37
|
ஓலைகள்
கிடந்தநீண் கமுகொ டும்பனை
பாலைகள் மாமகிள் பலவு சுள்ளிகள்
கோலைகள் சந்தனங் குங்கு மம்பல
சோலைகள் கிடந்தன தொகுப்ப வண்ணமோ. |
|