ஓலைகள் கிடந்த
நீண் கமுகொடும் பனை,
பாலைகள், மா, மகிள், பலவு, சுள்ளிகள்,
கோலைகள், சந்தனம், குங்குமம் பல
சோலைகள் கிடந்தன : தொகுப்ப வண்ணமோ ? |
ஓலைகள் கொண்ட
நெடிய கமுகுகளும் பனைகளும் பாலை
மரங்களும் மாமரங்களும் மகிழ மரங்களும் பலா மரங்களும் மரா
மரங்களும் இலந்தை மரங்களும் சந்தன மரங்களும் குங்கும மரங்களும்
கொண்ட சோலைகள் அங்குப் பல இருந்தன : அவற்றைத் தொகை
யெடுத்தல் இயலுவதோ?
சோலைகளில்
பிற மரங்களும் இருப்பினும், மிகுதியாக உள்ள மரங்களால் மாஞ்சோலை, கமுகந் தோப்பு
என்றவாறு பெயர் பெறும்.
பலவு - பலா; நிலவு - நிலா என்பதுபோல. கோலை - கோல் : இது
இலந்தைக்கு ஒரு பெயர். இங்கு எதுகைப் பொருட்டுக் 'கோலை' எனச்
சாரியை பெற்று நின்றது.
38
|
தேன்வள
ரலங்கலைச் சிறைசெய் கூந்தலோ
கான்வளர் சண்பக மலர்ந்த காவுகள்
வான்வளர் துளிநலம் வழங்குங் கொண்டலோ
தேன்வளர் ஒலிக்கொடு தேன்பெய் சோலையே. |
|
தேன்
வளர் அலங்கலைச் சிறை செய் கூந்தலோ
கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள்?
வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே? |
வாசனை பெருகுகின்ற
சண்பக மலர்கள் மாலைபோல் மலர்ந்துள்ள
சோலைகள் தேன் பொருந்தியுள்ள மாலையைச் சிறைசெய்து
கொண்டிருக்கும் மகளிர் கூந்தல் என்போமோ? வண்டுகள் வளர்க்கும்
ஓசை எழும்பத் தேனைச் சொரியும் சோலைகள் வானத்தில் வளரும்
துளியாகிய நலத்தைப் பூமிக்கு வழங்கும் கார் மேகம் என்போமோ?
சோலையின் இருளைக் கூந்தலாகவும், சண்பக மலர்க்கொத்தை
மாலையாகவும், வண்டின் இரைச்சலை மேகத்தின் சிறு முழக்கமாகவும்,
தேன் துளியை மழைத் துளியாகவும், இருண்ட சோலையைக்
கார்மேகமாகவும் கொண்டு மயங்கியதாகக் கொள்க. கூந்தலோ,
கொண்டலோ என மயங்கியமையால் இது மயக்கவணி.
|