|
"பொய் அகன்று
எழுவ தெய்வப் பூரண ஓகையாளே,
ஐ அகன்று உவப்பின் நாதன் அடைந்து வாழ் நெஞ்சத்தாளே,
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண் இல் ஆசி.
துய் அகம் பொலியப் பூத்த சுந்தரி, வாழி!" என்றான். |
"பொய்மை அறவே
நீங்கப் பெற்று உயர்வதானால் ஆண்டவனின் முழு
மகிழ்ச்சிக்கு உரியவளே, ஐயத்திற்கு இடமின்றி மகிழ்ச்சியோடு ஆண்டவனே
வந்தடைந்து குடியிருக்கும் நெஞ்சம் படைத்தவளே, உலகத்தின் வாழும்
சிறந்த மகளிருக்குள்ளே ஆண்டவனின் எண்ணற்ற நல்லாசிகள்
பொலிவதனால் தூய மனம்பூத்து விளங்கும் அழகியே, நீ வாழ்க!" என்றான்.
'ஆசி
பொலியத் துய் அகம் பூத்த சுந்தரி' என மாற்றிக் கூட்டுக.
7 |
கனிக்கள
வுயர்ந்த கோடு வளையும்போற் கருணை யார்ந்த
நனிக்கள வெளிமை பூத்த நறுமையிற் பொருவாக் கன்னி
தனக்கள வகன்ற வாசி சாற்றிய சொல்லை யாய்ந்த
மனக்கள வுளைந்து நாணி வரைந்தவோ வியமே யொத்தாள். |
|
கனிக்கு அளவு
உயர்ந்த கோடு வளையும் போல், கருணைஆர்ந்த
நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவாக் கன்னி,
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கு அளவு உளைந்து நாணி,. வரைந்த ஓவியமே ஒத்தாள். |
உயர்ந்த மரக்
கிளை தான் தாங்கியுள்ள கனிகளின் பாரத்து அளவாக
வளைதல்போல், தெய்வ அருள் தன்னிடம் நிறைந்துள்ள மிகுதிக்கு அளவாக
எளிமை பொலித்து விளங்கிய நல்லியல்பால் யாரும் தனக்கு நிகராதல்
இல்லாத கன்னிமரியாள், தனக்கு அளவில் அடங்காத வாழ்த்துரை மொழிந்த
வானவனின் சொற் பொருளை ஆராய்ந்து பார்த்த மன உணர்வின்
அளவுக்குத் தக்கவாறு வருந்தியும் நாணியும், வரைந்து வைத்த சித்திரம்
போல் அசைவற்று நிலைத்தாள்.
மனக்கு
- மனத்துக்கு: சாரியை இடையே தொக்கது. |