| 8 |
கலங்கின
வகத்துந் தெண்ணீர்க் கடலள றாகா வண்ணம்
மலங்கின வகத்துங் கன்னி மயக்குறா துரனுற் றோங்கித்
துலங்கின வகத்துன் னேவல் தொடர்நெறி தோற்று வாயென்
றிலங்கின வகத்துள் ளுள்ளி யிறைவனை வணக்கஞ்
செய்தாள். |
| |
கலங்கின அகத்தும்
தெள் நீர்க் கடல் அளறு ஆகா வண்ணம்,
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது, உரன் உற்று ஓங்கி,
"துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய்" என்று
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள். |
தெளிந்த நீருள்ள
கடல் கலங்கினவிடத்தும் சேறு ஆகாமை
போல, கன்னி மரியாளும் திகைத்தவிடத்தும் மயக்கங் கொள்ளாமல்,
மன வலிமைகொண்டு ஓங்கி, "துலங்கின உன் உள்ளத்தினின்று பிறந்த
கட்டளையை நான் தொடர்வதற்கான வழியை எனக்குப் புலப்படுத்துவாய்"
என்று கடவுள் அருளால் விளங்கின தன் மனத்துள் நினைத்து
ஆண்டவனை வணக்கம் செய்தாள்.
| 9 |
பளிங்கடுந்
தவற்றைக் காட்டும் பான்மையா லிவள்முகத்தி
லுளங்கடுத் தவற்றை யோர்ந்த கபிரியே உறுதி சொல்வான்
விளங்கடுத் திறைவற் கன்பு மீதுற வுவகை பூத்த
வளங்கடுத் துயர்ந்த மாதே மயக்குற வருந்து வானேன். |
| |
பளிங்கு அடுத்தவற்றைக்
காட்டும் பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்:
"விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த
வளம் கடுத்து உயர்ந்த மாதே, மயக்கு உற வருந்துவான் ஏன்?" |
|