பக்கம் எண் :

முதற் காண்டம்335

                       11
அளியமைந் துயிர்த்த செம்ம லநந்தன்சே யென்ன நேமி
யுளியமைந் தரசு தாவித் துயர்ந்தகோ லோச்சி நாளுங்
களியமைந் தளித்த பாரிற் காவலென் றாள்வா னென்ன
நளியமைந் தினிய சொல்லை நவின்றடி வணங்கிட் டானே
 
"அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன
                                       நேமி -
யுளி அமைந்து, அரசு தாவித்து உயர்ந்த கோல் ஓச்சி, நாளும்,
களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான்" என்ன,
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே.

     "அன்பு பொருந்தி நீ பெற்றெடுக்கும் அச்சிறந்த மகன் முடிவற்ற
கடவுளின் மகனென இவ்வுலகில் அமைந்து, அரசனாகிய தாவிதனின்
உயர்ந்த செங்கோலை நடத்தி, தான் களிப்புக் கொண்டு மீட்டருளிய
இவ்வுலகில் காவலனென்று அமைந்து எந்தாளும் ஆட்சி செய்வான்"
என்று, குளிர்ச்சி பொருந்திய இனிய சொல்லைக் கூறி அவ்வானவன்
மரியாள் அடியை வணங்கினான்.

     அநந்தன் - அந்தமில்லாதவன்: முடிவில்லாத இறைவன். காவல்
- காவலனுக்கு ஆகுபெயர்.

 
                        12
தொய்யலுற் றிறைவன் றாளைத் தொழுதுவாழ் திருவல்
                                       லோனே
மய்யலற் றழிவில் கன்னி மைந்தனைப் பெறுத லேதென்
றய்யமுற் றிவள்வி னாவ வரியமா தடியைப் போற்றி
வெய்யிலுற் றடைந்த தூதன் விடைமொழி யுரைப்பான்
                                    மன்னோ.