| 14 |
மகற்பெறு
வயது முற்றி மைமையா மெலிச பெற்குந்
தகற்பெறு கருப்ப மாகித் தவன்றவெண் டிங்க ளாறாய்ப்
பகற்பெறு கன்னி யாய்நீ பழுதிலா சிறுவ னீன
லிகற்பெறு வினையென் றாலு மிறையவற் கெளிய தன்றோ. |
| |
"மகன் பெறும்
வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும்
தகல் பெறு கருப்பம் ஆகித் தவன்ற வெண் திங்கள் ஆறு
ஆய்,
பகல் பெறு கன்னியாய் நீ பழுது இலா, சிறுவன் ஈனல்,
இகல் பெறு வினை என்றாலும், இறையவற்கு எளியது
அன்றோ?" |
"மகனைப்
பெறுவதற்குரிய வயது கடந்து முதிர்ந்து மலடியாகிய
எலிசபெத்தைக்கும் தகுதி வாய்ந்த கருப்பம் உண்டாகி மறைந்த வெண்
திங்கள் ஆறு ஆகியிருக்க, விளக்கங் கொண்ட கன்னியாகவே நீ இருந்து,
அக்கன்னிமைக்குப் பழுது இல்லாமலே மகனைப் பெறுதல், முரண்பட்ட
செயலே ஆயினும், ஆண்டவனுக்கு எளிய செயலே அல்லவா?"
மறைந்த
வெண் திங்கள் ஆறு என்பது ஆறு தடவை மதி தோன்றி
மறைவதனால் ஏற்படும் ஆறு மாதங்களைக் குறித்தது. திங்கள் மாதத்திற்கும்
பெயரேயாயினும், 'வெண்' என்ற அடைமொழியால் மதிக்கே உரியதாயிற்று;
எலிசபெத்தை பற்றிய செய்திகள் 26-வது, கருணையன் மாட்சிப்படலம், 1-11
காண்க.
| 15 |
ஆவதுங்
கடந்த காட்சிக் கருந்தவ னீச யீய
னோவது மின்றிக் கன்னி யொருமக வுயிர்ப்பா ளென்னக்
கோவது விறைவன் சொன்ன கூற்றென வுரைத்தல்
பொய்யா யாவது மறிதி யல்லால் யாளினக் குரைப்ப
தென்னோ. |
| |
"ஆவதும் கடந்த
காட்சிக்கு அருந் தவன் ஈசயீயன்,
'நோவதும் இன்றிக் கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள்' என்ன,
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல்
பொய்யா யாவதும் அறிதி அல்லால், யான் நினக்கு உரைப்பது
என்னோ?"
|
|