|
"எதிர்காலத்தில்
ஆவதையும், கடந்து காணக்கூடிய காட்சி வரத்திற்கு
உரியவனான அரிய தவமுள்ள ஈசயியன் என்னும் இறைவாக்கினன், 'ஒரு
கன்னி நோவதும் இல்லாமல் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்' என்று வானுலக
இறைவன் சொன்ன வார்த்தையாக உரைத்துள்ளது, பொய்யாதல் இல்லை.
எல்லாவற்றையும் நீயே அறிவாய் அல்லாமல், நான் உனக்கு உரைக்க
வேண்டியது என்னவோ?"
ஈசயீயன் - இசையாஸ்
என்ற இறைவாக்கினன். அவன் உரைத்தது:
"ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒர் அடையாளம் கொடுப்பார். இதோ
கன்னிப்பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாள்; அவனை
இம்மானுவேல் என்று பெயரிட்டு அழைப்பாள்." (இசையாஸ் 7:14). 'கோ
அது இறைவன்' என்ற தொடரில் 'அது' என்பது பகுதிப் பொருள் விகுதி.
| 16 |
நேயமாம்
பிரீத்து சாந்து நிழன்றதண் கவிகைக் கீழ்நீ
தாயுமா யொன்றா மூவர் தமிற்சுதன் றன்னை யீன்றுந்
தூயமா கன்னிக் கேதந் தோன்றிலா சுடரி னூங்கு
மாயமாய்க் காக்கு வானென் றஞ்சலி செய்திட் டானே. |
| |
"நேயம் ஆம்
பிரித்து சாந்து நிழன்ற தண் கவிகைக் கீழ், நீ
தாயும் ஆய், ஒன்று ஆம் மூவர் தமில் சுதன் தன்னை
ஈன்றும்
தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு
மாயமாய்க் காக்குவான்" என்று அஞ்சலி செய்திட்டானே. |
"அன்பு வடிவமான
தூய ஆவி நிழலிட்ட குளிர்ந்த குடையின்
பாதுகாப்பில், நீ தாய் ஆகியும், ஒரே கடவுளாய் மூன்று ஆட்களாய்
அமைந்துள்ளோருள் மகனாகிய ஆண்டவனைப் பெற்றெடுத்தும், உனது
தூய சிறந்த கன்னிமைக்குக் கேடு தோன்ற இடமில்லாவண்ணம்,
ஆண்டவனே கதிரவனைக் காட்டிலும் சிறந்த ஒளியோடு வியப்புக்குரிய
முறையில் காப்பான்" என்று கூறிக் கபிரியேல் வணக்கம் செய்தான்.
மூவர்:
பிதா, சுதன், ஸ்பிரித்து சாந்து, இவற்றுள் முன்னிரண்டும்
வடமொழி; பின்னது இலத்தீன். இதன் முதலெழுத்து வேற்றொலியாதலின்
விலக்கப்பட்டது. இதன் இரு மொழியாக்கம் பரிசுத்த ஆவி, தந்தை,
மகன், தூய ஆவி. எனத் தனித்தமிழ் இம்மூவரைக் குறிக்கும். |