|
பாவமாகிய கேட்டை
விளைவித்த ஆதனால் உண்டான இழிவை
ஆண்டவனே ஒழித்து மனித உயிர்கள் யாவற்றையும் மீட்டுக் காக்கும்
பொருட்டு, அவ்வாதனைப் படைத்த நாளும் நேரமும் ஆகிய வேளையில்,
சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமையில் உதித்தான், இவ்வாறு முன்னோர்
வேத வாக்காகக் கூறிய வண்ணம் எல்லாம் குறையற நிறைவேறிற்று.
'அன்றோ' அசைநிலை.
'நாளும் அமையமும்' என்று தொடங்கி,
நாளை மட்டும் இங்கே கூறி அமைந்தது, நேரம் முந்திய பாடலிற்
கூறியுள்ளமையால் என அறிக.
| 25 |
யாழிசை
பழிப்ப வானோ ரினிதெனப் பாட வாங்கு மாழலை
பழிப்பத் தொய்ய லார்ந்ததாய் நயப்ப வெய்யோன் கேழொளி
பழிப்ப வன்ன மனையொளி கிளர்ப்ப வானில் வீழுறை
பழிப்ப வெங்கும் விழுநயன் பொழிந்த தன்றோ. |
| |
யாழ் இசை பழிப்ப
வானோர் இனிது எனப் பாட, ஆங்கும், ஆழ்
அலை
பழிப்பத் தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப, வெய்யோன் கேழ் ஒளி
பழிப்ப அன்ன மனை ஒளி கிளர்ப்ப, வானில் வீழ் உறை
பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ. |
அப்பொழுது, யாழின்
இசையைப் பழிக்கத் தக்க வகையில் வானவர்
இனிதாகப் பாடவும், ஆழ்ந்த கடலைப் பழிக்கத் தக்கவாறு இன்பம்
நுகர்ந்து தாய் மகிழவும், பகலவனின் அழகிய ஒளியைப் பழிக்கத்
தக்கவண்ணம் அந்த இல்லம் ஒளிமிக்கு விளங்கவும், மேகத்தினின்று
விழும் மழைத் துளியைப் பழிக்கத் தக்க வகையில் எங்கும் சிறந்த
நன்மை பொழிந்த வண்ணம் இருந்தது.
| 26 |
பளிக்குவேய்
செப்பி லுண்ட பருதிசூ ழெறிக்கும் வில்லாற்
றெளிக்குமே போலுந் தேன்பெய் செழுமலர் முகைண் மோத
மளிக்குமே போலும் வாய்ந்த வன்னமா கன்னி மாட்டெவ்
வுளிக்குமே மணமும் வில்லு மொளிமுகத் தொழுகிற் றம்மா. |
|