பளிக்கு வேய்
செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும்
வில்லால்
தெளிக்குமே போலும், தேன் பெய் செழு மலர் முகைகள்
மோதம்
அளிக்குமே போலும், வாய்ந்த அன்னமா கன்னி மாட்டு எவ்
உளிக்குமே மணமும் வில்லும் ஒளி முகத்து ஒழுகிற்று, |
அம்மா!
பளிங்கினால் செய்த செப்பினுள் கொண்ட கதிரவனின் கதிர்
சுற்றிலும் வீசும் வில்லொளியால் தன்னைப் புலப்படுத்துவது போலவும்,
தேனை உள்ளே கொண்டுள்ள செழுமையான மலர் மொட்டுகள் தம்
மணத்தால் உள்ளே தேன் இருப்பதைப் புலப்படுத்துவது போலவும், கடவுள்
உள்ளே வாய்க்கப் பெற்றிருந்த அக்கன்னி மரியாளிடத்தும் எப்பக்கமும்
எழுந்த மணமும் வில்லொளியும் ஒளி பொருந்திய முகத்தின் வழியாக அவ்
வுண்மையைப் புலப்படுத்திற்று,
அம்மா! அம்மா-வியப்பு உணர்த்தும் இடைச்சொல்.
"அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்," என்பது போல், மரியாளின் முகத்து ஒளி அகத்து
இருந்த ஆண்டவனைப் புலப்படுத்திற்று என்க. 'பளிங்கு' எதுகை ஓசைப்
பொருட்டு 'பளிக்கு' என வலித்து நின்றது.
| 27 |
சேயெனத்
தன்கண் வந்த தேவனை வணக்கஞ் செய்து
தாயெனத் திறம்பாக் கன்னி தன்னுயிர் கிளர்ப்பத் தாறிற்
றூயெனத் துளித்த மாரித் தொகையின்மேல் வரங்கள் வாரும்
வாயெனக் கண்ட வானோர் வாயடைத் தஞ்சா நின்றார். |
| |
சேய் எனத் தன்கண்
வந்த தேவனை வணக்கம் செய்து,
தாய் எனத் திறம்பாக் கன்னி, தன் உயிர் கிளர்ப்ப, தாறு இல்
தூய் என, துளித்த மாரித் தொகையின் மேல் வரங்கள் வாரும்
வாய் எனக் கண்ட வானோர் வாய் அடைத்து அஞ்சா நின்றார். |
தாய்
என ஆகியும் அழியாத கன்னியாகிய மரியாள், தனக்கு மகன்
எனத் தன் வயிற்றின் கண் வந்தடைந்த ஆண்டவனை வணக்கம் செய்து,
தன் உயிர் எழுச்சி கொண்டாள். அவள் அளவில்லாத தூயவள் எனவும்,
|