| பெய்த மழைத் துளியின்
தொகைக்கும் மேலாகத் தெய்வ வரங்களை
வாரிக்கொள்ளும் இடம் எனவும் கண்ட வானவர் வியப்பால் வாயடைத்து
அஞ்சி நின்றனர்.
| 28 |
அஞ்சிய
வணக்கத் தோடு மஞ்சலி செய்து தாயுந்
துஞ்சிய வுயிர்க ளுய்யத் தொடர்பொடீங் கெய்தி யார்வம்
விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பிவா னுயர்வாழ் வீட்டை
யெஞ்சிய விழுப்பத் தோங்கி யினிதெனப் பாடா நின்றார். |
| |
அஞ்சிய வணக்கத்தோடும்
அஞ்சலி செய்து, தாயும்,
துஞ்சிய உயிர்கள் உய்யத் தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம்
விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பி, வான் உயர் வாழ் வீட்டை
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி, இனிது எனப் பாடா நின்றார். |
அவ்வானவர்
அச்சங் கலந்த வணக்கத்தோடு கைகூப்பித் தொழுது,
அத்தாயையும், பாவத்தால் மடிந்த மனித உயிர்கள் மீட்புப் பெறுமாறு
அன்போடு இவ்வுலகு வந்தடைந்து ஆர்வம் ஓங்கிய மகனையும் விரும்பி
வாழ்த்தி, தாம் வாழும் உயர்ந்த வான் வீட்டையும் மிஞ்சிய சிறப்பினால்
எழுச்சிகொண்டு, பின் வருமாறு இனிதாகப் பாடத் தொடங்கினர்:
மூன்றாம் அடியில்,
'விரும்பி வாழ்த்தி' எனவும், 'வாழ் உயர் வான்
வீட்டை' எனவும் சொற்களை மாற்றிக் கூட்டுக.
வானவர்
பாடல்
-
மா, தேமா, - மா, தேமா, - மா, தேமா, கூவிளம்
| 29 |
வாழு
வானு ளோரி யாமு மருவு நன்றி மேலுயர்ந்
தாழு மாழி சூழு பாரி லரிவை யுண்ட தேவருட்
சூழு சூலி தாய போது சுடரெ ரிந்த வானுமேற்
றாழு பூமி யேற வாய தகவு வாடி லாவதே. |
|