பக்கம் எண் :

முதற் காண்டம்347

 
"வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து,
ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள்
சூழு சூல் இது ஆய போது, சுடர் எரிந்த வானும் மேல்
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே."

     "நல்வாழ்வு வாழும் வானுலகில் உள்ளோராகிய நாமும் கொண்டுள்ள
நன்மையின் மேலும் உயர்ந்து, ஆழமான கடல் சூழும் மண்ணுலகிலுள்ள
இம்மங்கை கொண்டுள்ள தெய்வ அருள் சூழ்ந்த இந்தக் கருப்பம்
உண்டாகிய போதே, சுடர்கள் எரிந்து நின்ற வானுலகினும் மேலாகத்
தாழ்ந்து கிடந்த பூமி ஏற்றம் பெற்றதாகிய இப்பெருமை என்றும் வாடாது
நிலை பெறுவதாகும்."

     உளோர் + யாழும் - யகரப் புணர்ச்சியில் இகரம் பெற்று, 'உளோரி
யாமும் என நின்றது. சூழ், தாழ் என்ற வினைப் பகுதிகள் சூழு, தாழு என
உகரம் பெற்று நின்றன. 'சுடர்' என்றவிடத்து முச்சுடரும் கொள்க.
     
     இப் பகுதிப் பாடல்கள் முந்திய பாடலின் இறுதியை அடுத்த பாடலின்
முதலாகக் கொண்டுவரும் அந்தாதித் தொடையாய் அமைந்துள்ளமை காண்க.

 
                30
வாடி லாது மாறி லாத மணமெ றிந்த பூங்கொடி
கேடி லாது லாவு தேறல் கிளர ரும்பு சூலுநீஇ
யீடி லாது ஞால மேவு மிழிவ மைந்த நோயறக்
காடி யாவும் வாச மாரு கனியை யீனு நாளிதே.
 
"வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூங்கொடி,
கேடு இலாது, உலாவு தேறல் கிளர் அரும்பு சூல்                                      உறீஇ,
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய்                                      அற,
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே."

     "வாடுதல் இல்லாமலும் மாறுதல் இல்லாமலும் தன் மணம் பரப்பிய
பூங்கொடியாகிய மரியாள், தன் கன்னிமைக்குக் கேடு இல்லாமல், தன்னுள்
உலாவும் கருணையாகிய தேன் கிளர்ந்து எழும் கடவுளாகிய அரும்பைக்
கருப்பம் தாங்கியுள்ளமையால், தானே ஈடு செய்ய வழியில்லாத
தன்மையாய்