| இவ்வுலகம் அடைந்துள்ள
இழிவு அமைந்த பாவ நோய் நீங்கப் பெறுமாறு,
உலகம் முழுவதும் தன் வாசனையைப் பரப்பும் ஒரு கனியை ஈன்றெடுக்கும்
நாள் இதோ அடுத்து வந்து விட்டது."
காடு + யாவும்
- 'காடியாவும்' என யகரம் வரக் குற்றுகரம் இகரமாய்
திரிந்தது.
| 31 |
நாளி
தேயு வப்ப ஞால நசைய மிழ்ந்தி ராவறக்
கோளி தேக டுத்த தீது கொணர்கு னுங்கி னோயற
வாளி தேபி ழைத்த நீச மனும லிந்த கேடறப்
பீளி தேவி யப்ப வீடு பெறுவு கின்ற நாமுமே. |
| |
"நாள் இதே உவப்ப
ஞாலம். நசை அமிழ்ந்து இரா அறக்
கோள் இதே. கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற
வாள் இதே. பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற,
பீள் இதே, வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே." |
"உலகமெல்லாம்
மகிழ்வதற்குரிய நாள் இதுவே. ஆசையில் அமிழ்ந்திக்
கிடத்தலாகிய இரவு அறுவதற்கான ஞாயிறு; இதுவே, மிகுந்த தீமையை
இவ்வுலகில் கொணர்ந்த பேயின் நோயாகிய பாவம் அறுவதற்கான வாள்
இதுவே, பிழை செய்த நீச மனுக்குலத்திடையே மலிந்து கிடக்கும்
கேடெல்லாம் அறவும், மோட்ச வீடு பெற்று வாழ்கின்ற நாமுமே
வியப்படையவும் வந்தமைந்த கருப்பம் இதுவே."
| 32 |
| பெறுவு
கின்ற நாம வாகை பெருகு கின்ற பேலினா னுறுவு கின்ற ஞாலம் யாவு முளைய வந்த பீடைக
ளிறுவு கின்ற கால மாக விளவ னின்ற நாதனைத் துறுவு கின்ற நூலி னோடு துதிசெய் கின்றி
யாவரே |
| |
"பெறுவுகின்ற
தாம வாகை பெருகுகின்ற வேலினான்,
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள்
இறுவுகின்ற காலம் ஆக, இளவல் நின்ற நாதனைத்
துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்று யாவரே?" |
|