| "தான் பெறவிருக்கின்ற
திருப் பெயராகிய வெற்றி பெருகுகின்ற
வேலினால், அல்லல் அடைகின்ற உலகமெல்லாம் வருந்து மாறு
வந்தடைந்துள்ள துன்பங்கள் முடிவு பெறுகின்ற காலம் வந்து சேரவே,
சிறுவனாய்ப் பிறந்து வர நின்ற இவ்வாண்டவனைப் பெருகுகின்ற
நூலறிவோடு கண்டறிந்து தக்கவாறு துதிக்கக் கூடியவர் யார்?"
அந்நாமம் 'இயேசு'
என்பது 10-ம் பாடலில் கூறப்பட்டது.
'பெறுவுகின்ற' என்பது போல் அடிதோறும் முதற் சீர்க்கண் பெயரெச்ச வினையடிகள் உகரச்
சாரியை பெற்று நின்றன. 'செய்கின்றவர்' என்ற
வினையாலணையும் பெயர் விகுதி குறைந்து நின்றது.
| 33 |
துதிசெய்
கின்றி யாரு முண்ட துகடு டைத்த நன்றியால்
விதிசெய் கின்ற வேத நின்று மிகைது டைத்த ஞானமாய்க்
கதிசெய் கின்ற வீற கன்ற கனிவு குக்கு வான்மிசை
பதிசெய் கின்று வாழ வொன்று பரிசி லக்க மாகுமோ. |
| |
"துதி செய்கின்ற
யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால்,
விதி செய்கின்ற வேதம் நின்று, மிகை துடைத்த ஞானம் ஆய்,
கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான்மிசை
பதி செய்கின்று வாழ, ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ?" |
"தன்னைத் துதிக்கின்ற
யாவரும் கொண்ட பாவங்களைத் தான்
துடைத்துவிட்ட நன்மையால், விதிகளை வகுத்துத் தருகின்ற வேத
நெறியில் அன்னார் வழுவாது நின்று, துன்பமெல்லாம் துடைத்த
ஞானத்தை அடைந்து, தமக்குக் கதியாக அமைந்துள்ள முடிவில்லாத
இன்பத்தைத் தரும் வான் வீட்டில் குடிகொண்டு வாழும்படி, ஆண்டவன்
இக்கருவில் வந்து ஒன்றியுள்ள தன்மை விளக்கிக் கூறும் இயல்பினதோ"?
செய்கின்ற
+ யாரும் என்பது, அகரங் கெட்டு, செய்கின்று + யாரும்
என நின்று, யகரப் புணர்ச்சியில் குற்றுகரம் இகரமாய்த் திரிந்து,
'செய்கின்றியாரும்' என வந்தது. |