|
திருமகன் பிறந்து,
பாவ மீட்பிற்காக உயிர் கொடுத்து, சாவை
வென்று உயிர்த்தெழுந்து பேயை வெல்லும் நிகழ்ச்சி, இச்சூலால்
தொடங்கியுள்ளமையின், அது இன்றே நரகத்தில் விழுந்ததற்குச்
சமமாகுமென்று வானவர் கூறுகின்றனர்.
உடன்றி
- உடன்று: இச்சொல் வருமொழி உயிரோடு சேர்ந்து
சந்தம் சிதையாமைப் பொருட்டு 'உடன்றி' என மாறி நின்றது.
| 36 |
மண்ட
லங்க ளங்க மெங்கும் வாரி மாறு வாண்முகன்
கண்ட லங்க ளுங்க லங்கு காலு ஞான காந்தியால்
விண்ட லங்க ளங்க ணின்ற மீனு நாண வேய்ந்தசூ
லெண்ட லங்க ளெங்கு நன்றி யீறி லாம லீகுமே. |
| |
"மண் தலம் களங்கம்
எங்கும் வாரி மாறும் வாள்முகன்,
கண் தலங்களும் கலங்கு, காலும், ஞான காந்தியால்,
விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல்,
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈகுமே." |
"மண்ணுலகின்
பாவக் களங்கத்தை எங்கும் வாரித் துடைக்கும் ஒளி
முகங் கொண்ட ஆண்டவன், கண்களெல்லாம் கலங்குமாறு வெளிவிடும்
தனது ஞான ஒளியால், வானத்தின் இடங்களி தோறும் அங்கங்கு நின்ற
விண்மீன்களும் நாணுமாறு பொருந்தி நின்ற இக்கருப்பம். எண்ணும்
இடங்கள் எங்கும் முடிவு இல்லாமல் நன்மைகளை வழங்கி நிற்கும்."
| 37 |
ஈறி
லாம லேகி மூட ரீங்கு தேடு சீரெலாஞ்
சேறி லாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்ததே
மாறி லாது நீடு வாழ்வு வான நாத னீகுவான்
பேறி லாத மனுவொ டொத்த பிணிய ருந்த வுற்றுளான். |
| |
"ஈறு இலாமல்
ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம்
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே
மாறு இலாது நீடு வாழ்வு வான நாதன் ஈகுவான்.
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான்." |
|