| "மூடர்
இடைவிடாமல் அலைந்து திரிந்து இவ்வுலகில் சம்பாதிக்கும்
செல்வமெல்லாம் சேறு இல்லாத வயலில் பேதையர் விதைத்த செந்நெல்
விதைக்கே ஒப்பாகும். மாறுதல் இல்லாது நீடிக்கும் வாழ்வை வானுலக
ஆண்டவன் ஒருவனே வழங்குவதற்காகவே, தனக்கென நன்மைப் பேறு
ஒன்றுமில்லாத மனுக்குலத்தோடு ஒத்த துன்பங்களைத் தானும்
அனுபவிக்கக் கருவாகி வந்துள்ளான்."
சேறில்லாத
வயலில், விதைத்த பயனேயன்றி விளைவுப் பயன்
பெறாமை போல, உலகச் செல்வத்தாலும் தேடிய பயனே யன்றி நீடிய
பயன் பெறார் என்பது கருத்து. ஈங்கு+தேடு - 'ஈங்குத் தேடு' எனச்
சுட்டுச் சொல் மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வலி மிகுதல்
பழைய இலக்கண மரபு. முனிவர் அதனை வலி மிகாமற்
கையாண்டுள்ளார்.
| 38 |
உற்ற
மீனும் வானும் வான முற்ற யாமு மோயுமீ
றற்ற வாசை யோடு கூச திர்ப்பில் வாழ்த்து நாதனைக்
குற்ற மாறி வாழு கோதை குக்கி சூழு வாயசூல்
சொற்ற வாய சீரதோதொ டுத்த பாவின் மாலையால். |
| |
"உற்ற மீனும்
வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு
அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனைக்
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல்,
சொற்ற ஆய சீரதோ, தொடுத்த பாவின் மாலையால்?" |
"வானமும் வானத்தில்
உள்ள வீண்மீன்களும் வான்வீட்டில்
உள்ள வானளாகிய நாமும் ஓய்வும் முடிவுமற்ற ஆசையோடும் கூசும்
நடுக்கத்தோடும் வாழ்த்தும் ஆண்டவனைக் குற்றமெல்லாம் நீங்கி வாழும்
மாலை போன்ற மரியாள் தன் வயிற்றில் அடக்கிக் கொள்ள அமைந்த
இக் கருப்பத்தின் பெருமை, புலவர் தொடுத்த பாமாலையால் சொல்லிக்
காட்டத்தக்க தன்மை யதோ?"
| 39 |
தொடுத்த
பாவை நிகர நீதி துடரு நூலின் முறையினா
லடுத்த மூவு லகமி யாவு மரிய மூன்று விரலினாற்
றடுத்த வீர வெதிரி லாது தகவி றாங்கு பரமனை
யுடுத்த சூலி லரிதி றாங்கு முவமி யாதோர் வறிலியே. |
|