| |
"தொடுத்த பாவை
நிகர, நீதி தொடரும் நூலின் முறையினால்,
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால்,
தடுத்த வீர எதிர் இலாது, தகவில் தாங்கு பரமனை,
உடுத்த சூலில் அரிதில் தாங்கும், உவமியாத ஒர் விறலியே." |
"இலக்கண நெறிப்படத்
தொடுத்த செய்யுளைப் போல, நீதி நெறியைத்
தொடரும் வேத நூலின் முறையினால், அடுத்த மூன்று உலகங்களையும்
அவற்றில் அடங்கிய யாவற்றையும் தன் அரிய மூன்று விரல்களினால்,
தன்னைத் தடுக்க வல்ல வீரமோ எதிரோ இல்லாமல், தன் வல்லமையாகிய
தகுதி கொண்டே தாங்கி நிற்கும் ஆண்டவனை, தனக்கு உவமையாக வேறு
ஒன்றும் இல்லாத பெருமைக்குரிய பெண் தான் அணிந்த கருப்பத்தில் அரிய
முறையால் தாங்கி நிற்பாள்."
'அரிய முறை'
என்றது, தாயாகியும் கன்னிமை கெடாத அருமையைக்
கருதியது. உலகம் + யாவும் - உலகமியாவும்: மெய்யீறு யகர முன்னர்
இகரம் பெற்றுப் புணர்ந்தது. உவமியாத + ஓர் - 'உவமியாதவோர்' என்பது,
தொகுத்தல் விகாரமாய், 'உவமியாதோர்' என நின்றது.
| 40 |
விறலி
யாலு யிர்த்த பாலன் விறலி னாலு யர்ந்தரா
மறலி னால மைத்த தீது மரபி னால ழிந்தறத்
திறலி னால்மி தித்த கூளி சிரமெ லாநெ ரித்தடும்
மிறலி னாலு குத்த பாவம் விலகு வான்வி ளங்குவான். |
| |
"விறலியால்
உயிர்த்த பாலன் விறலினால் உயர்ந்து, அரா
மறலினால் அமைத்த தீது மரபினால் அழிந்த அற,
திறலினால் மிதித்த கூளி சிரம் எலாம் நெரித்து அடும்
மிறலினால், உகுத்த பாவம் விலகுவான் விளங்குவான்." |
"பெருமை வாய்ந்த
இப்பெண்ணினிடமாகப் பிறந்துவரவிருக்கும்
குழந்தை நாதன் தன் வல்லமையினால் உயர்ந்து நின்று, பாம்பு வடிவமாக
வந்த பேய் மானிடர் மீது கொண்ட பகையினால் முடித்து வைத்த பாவத்
தீங்கு அற வேண்டிய முறையினால் ஒழிந்து அறுமாறு, தன் வலிமையினால்
மிதித்த பேயின் தலையெல்லாம் நெரித்துக் கொல்லும் பெருமையினால்,
அப்பேய் சொரியவிட்ட பாவமெல்லாம் விலகும்படி விளங்குவான்."
|