பக்கம் எண் :

முதற் காண்டம்354

     விலகுவான் - 'விலக' எனப் பொருள்படும் 'வான்' ஈற்று வினையெச்சம்.
பேய் விளைத்த தீங்கு பற்றிய விளக்கம், 27-வது, ஞாபகப்படலம், பாடல்கள்
109-121 கொண்டு அறிக.
 

                   41
வான்வி ளங்க மண்வி ளங்க வந்த நாதன் வாழியே
மீன்வி ளங்க லேய்த்த முத்து வேய்ந்த சிப்பி வாழியே
கான்வி ளங்க வுயிர ளிக்கு கனியி ராயன் வாழியே
தேன்வி ளங்க முகைவி ளாது தேறு கன்னி வாழியே.
 
"வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே!
மீன் விளங்கல் ஏய்த்த முத்து வேய்ந்த சிப்பி வாழியே!
கான் விளங்க உயிர் அளிக்கு கனி இராயன் வாழியே!
தேன் விளங்க முகை விளாது தேறு கன்னி வாழியே!

     "விண்ணுலகம் விளங்கவும் மண்ணுலகம் விளங்கவும் கருவாய்
அவதரித்து வந்த ஆண்டவன் வாழ்கவே! விண்மீன் ஒளிர்தலை ஒத்த
முத்தைக் கருவாக அணிந்த சிப்பியாகிய மரியாள் வாழ்கவே! உலகம்
நலமுடன் விளங்குமாற தன் உயிரைத் தரவிருக்கும் கனியாகிய
இவ்வரசன் வாழ்கவே! மொட்டு விரியாமலே தேன் வெளிப்படுதல்
கைவரப் பெற்ற இக் கன்னி வாழ்கவே!"

     சிப்பி மரியாள் எனவே, முத்து இயேசு என்பது பெறப்படும்.

 
                   42
வாழி மைந்த ருய்ய மைந்த னாய நாதன் வாழியே
வாழி நன்மை யீக வின்மை மவித யாபன் வாழியே
வாழி வாழு வானின் வாழ்வு மண்ணின் வாழ்வு வாழியே
வாழி கருணை யாழ வாழி மதுர வாழி வாழியே.
 
"வாழி, மைந்தர் உய்ய மைந்தன் ஆய நாதன், வாழியே!
வாழி, நன்மை ஈக இன்மை மலி தயாபன் வாழியே!
வாழி, வாழும் வானின் வாழ்வு மண்ணின் வாழ்வு, வாழியே!
வாழி, கருணை ஆழி, வாழி! மதுர ஆழி வாழியே!"