ஒளி முகத்து உள
யாவும் உவந்தது ஒத்து,
அளி முகத்து அமலன் மனு ஆயின
களி முகத்து, உயர் காயமொடு ஆர்கலி
நளி முகத்து அகல் ஞாலம் நயந்ததே. |
உலகத்தில்
உள்ள பொருள்கள் யாவும் கதிரவன் ஒளியின் முகத்தே
மகிழ்ந்தது போல, கருணை முகங் கொண்ட தூயவனாகிய ஆண்டவன்
மனிதனான களிப்பின் முகத்தே, உயர்ந்த வானத்தோடு கடல் செறிந்த
இடம் பரந்த மண்ணுலகமும் மகிழ்ந்தது.
காயம்
- ஆகாயம் என்பதன் முதற்குறை. "வறிது நிலை இய
காயமும்," என வருதலும் (புறம். 20) காண்க. வானமும் மண்ணும்
காரணம் அறியாமலே மகிழ்ந்தன என்று கொள்க.
| 45 |
சேது
லாவிய செங்கதீ ரோடுவான்
மீது லாவிய மீன்மகிழ்ந் தாலெனா
மாது லாவிய மாட்சியொப் பாகவிள்
ளேதி லாவொளி யேழ்மடங் காயதே. |
| |
சேது உலாவிய
செங்கதிரோடு வான
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா,
மாது உலாவிய மாட்சி ஒப்பாக, விள்
ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே. |
மரியாள்
என்னும் பெண்ணிடம் அன்று காணப்பட்ட மாட்சிக்கு
ஒப்பாக, செந்நிறத்தோடு உலாவிய கதிரவனோடு வானின் மேலிடத்து
உலாவிய விண்மீன்களும் மகிழ்ந்தாற் போல, அவை அன்று விரித்த
முற்றமில்லாத ஒளி ஏழு மடங்காகப் பெருகியது. 'சேது' என முதற்கண்
செந்நிறம் சுட்டப்படவே, பின் 'செங்கதிர்' என்றது, நிறம் கருதாது
திரவனுக்கு
ஒரு பெயர் என்ற அளவில் நின்றது. |