| 46 |
மிகையுற்
றாநிலங் காத்தவன் வேய்தலாற்
றகையுற் றாரிய தாரகை நோய்செய
நகையுற் றாலென நாண்மலர் தேனுக
முகையுற் றாயமு றுக்கவிழ்ந் தாமரோ. |
| |
மிகை உற்று ஆம்
நிலம் காத்து அவன் வேய்தலால்,
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய,
நகை உற்றால் என, நாள் மலர், தேன் உக,
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து, ஆம் அரோ |
பாவத்தாற்
கட்டுண்டு துன்பத்திற்கு உள்ளாகும் இம் மண்ணுலகைக்
காக்கும் பொருட்டு அவ்வாண்டவன் கருவாக உருவாகியுள்ளமையால்,
அழகு கொண்டு விளங்கிய சிறந்த விண்மீன்கள் தம் ஒளி ஓங்கிய காரணம்
அறியாது திகைத்துத் துன்புற, இது கண்டு நகைத்தாற் போல், மலரும்
பருவத்து மொட்டுகள் தம் இதழ்களின் கட்டு அவிழ்ந்து, தேனைச் சொரிந்து
புது மலர்கள் ஆகும்.
'அரோ'
அசைநிலை. நாள் மலர் - புது மலர்: அன்று அலர்ந்த
மலர்.
|
47 |
கடுக்கொ
டிங்குக டுத்தன தீதற
நடுக்கொ டன்புடை நாயகன் றாழ்தலான்
மடுக்கொ டெங்கணும் பூமலர் வண்ணமே
உடுக்கொ டண்டமி றங்கின தொத்ததால். |
| |
கடுக் கொடு இங்கு
கடுத்தன தீது அற,
நடுக் கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான்,
மடுக் கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே,
உடுக் கொடு அண்டம் இறங்கினது ஒத்தது ஆல். |
குளம் முதற்கொண்டு
உலகம் எங்கும் அந்நாளில் பூக்கள்
மலர்ந்து நின்ற அழகுத் தோற்றம், பாவ நஞ்சைக்கொண்டு இவ்வுலகில்
மிகுந்துள்ள தீமைகள் அறும்படியாக, நீதியொடு அன்பையும் உடன்
கொண்டுள்ள ஆண்டவன் வானுலகினின்று இறங்கி வந்துள்ளமையால்,
விண்மீன்களை உடன்கொண்டு வானமே இறங்கி வந்ததை ஒத்திருந்தது.
'ஆல்'
அசைநிலை. |