|
48 |
வள்ள வாயிள
மாங்குயி லோடெலாப்
புள்ள வாவுவப் பிற்புகழ்ந் தாலென
வுள்ள ளாமகிழ் வொத்தினி பாடலா
லெள்ள யாழிசை யேய்த்தன வாமரோ. |
| |
வள்ள வாய் இள
மாங் குயிலோடு எலாப்
புள் அவாவு வப்பில் புகழ்ந்தால் என
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால்
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ. |
வள்ளம் போன்ற
வாயையுடைய, மாமரத்து இளங் குயிலோடு
எல்லாப் பறவைகளும் ஆசை கொண்ட மகிழ்ச்சியோடு ஆண்டவனைப்
புகழ்ந்தாற்போல, தம் உள்ளத்தில் பெருகிய மகிழ்ச்சிக்கு ஏற்ப இனிது
பாடுதலால், யாழின் இசையை இகழ்வன போல் தோன்றின ஆகும்.
'அரோ' அசைநிலை.
இனி - 'இனிது' என்ற குறிப்பு வினையெச்ச
இறுதி கெட்டது.
| 49 |
ஐயும்
போயின போயின வாகுல
மொய்யும் போயின போயின முற்பழி
மையும் போயின போயின வஞ்சனை
பொய்யும் போயின போயின பூதமே. |
| |
ஐயும் போயின;
போயின ஆகுலம்;
மொய்யும் போயின; போயின முன் பழி;
மையும் போயின; போயின வஞ்சனை;
பொய்யும் போயின; போயின பூதமே. |
ஆண்டவனின்
அவதாரப் பெருமையால் இவ்வுலகில் ஐயங்களும்
விலகிப்போயின; துன்பங்களும் விலகிப்போயின; சண்டைகளும் போயின;
பழம் பழிகளும் தீர்ந்து போயின; குற்றங்களும் போயின; வஞ்சனைகளும்
போயின; பொய்களும் நீங்கிப் போயின; பேய்களும் விலகிப்போயின.
|