| 52 |
வேற
ரங்கிலு றங்கிவி ழித்திறை
காறொ ழுங்கடை காரணங் காண்டிலன்
மாற குங்கறை மாறிய சூசையிட்
டாறி றந்தத டம்பட வாழ்ந்தனன். |
| |
வேறு அரங்கில்
உறங்கி விழித்து இறை
கால் தொழுங் கடை, காரணம் காண்டு இலன்,
மால் தகும் கறை மாறிய சூசை, உள்
தாறு இறந்த தடப் பட ஆழ்ந்தனன். |
மயக்கம் என்று
சொல்லத்தக்க பாவக்கறை சிறிதும் இல்லாத சூசை,
அந்தச் சிறு மனையின் வேறு ஓர் அசையில் உறங்கி விழித்து, வழக்கம்போல்
ஆண்டவன் அடிகளைத் தொழும்போது, காரணம் அறியாமல், தன் உள்ளம்
அறிவு கடந்த பெருமை கொள்ள இன்பத்தில் ஆழ்ந்தான்.
காண்டிலன் -
'கண்டிலன்' என்பது நீட்டம் விகாரம் கொண்டது.
| 53 |
வைய நாயகன்
வையகத் தாரெலா
முய்ய வந்துல குற்றன னோவெனா
வைய மாயிறை யோனைய ருச்சனை
செய்ய வீழ்ந்தும கிழ்ந்தருட் சீர்த்தனர்.
|
| |
'வைய நாயகன்
வையத்தார் எலாம்
உய்ய வந்து உலகு உற்றனனோ?' எனா
ஐயம் ஆய், இறையோனை அருச்சனை
செய்ய வீழ்ந்து மகிழ்ந்து, அருள் சீர்த்தனன். |
'உலக
நாயகனாகிய ஆண்டவன் உலகத்தார் அனைவரும் பாவ மீட்பு
அடைந்து உய்யுமாறு வந்து இவ்வுலகை அடைந்தானோ?' என்று ஐயம்
கொண்டவனாய், ஆண்டவனை வழிபாடு செய்ய விழுந்து தொழுது மகிழ்ந்து,
தெய்வ அருள்கொண்டு சிறந்தான்.
|