| 59 |
கால்வ
ரும்பிழி கால்கமழ் வாகையான்
கால்வ ரும்பரி சாற்களி மாறமேற்
கால்வ ரும்படி கம்பலை காய்ந்துறுங்
கால்வ ருந்திய காதைசொல் வாமரோ. |
| |
கால்வு
அரும் பிழி கால் கமழ் வாகையான்,
கால் வரும் பரிசால், களி மாற, மேல்
கால் வரும் படி, கம்பலை காய்ந்து உறுங்
கால், வருந்திய காதை சொல்வாம் அரோ. |
பிற மலர்கள்
பொழிவதற்கு அரிய தேனைப் பொழிகின்ற மணம்
கமழும் மலர்க் கொடியை உடையவனாகிய சூசை வண்டிச் சக்கரம் மேலும்
கீழுமாக வரும் தன்மை போல், தான் கொண்ட களிப்பெல்லாம் மாறும்படி,
மேல் காற்று பாய்ந்து வருவது போல், துன்பம் காய்ந்த தன்மையாய்த்
தன்னை வந்து அடைந்த விடத்து, வருந்தி நின்ற கதையை இனிமேற்
சொல்வோம்.
'அரோ'
அசை நிலை, பிழி - பிழியப்படும் மது. இங்குக் 'கள்'
எனப்படும் பொதுமை நோக்கித் தேனுக்கும் பெயராயிற்று.
ஐயங்கொண்ட
சூசையின் கலக்கம்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 60
|
மாசறுங்
கருப்ப மாகி வளர்ந்துதேய் திங்க ளைந்தா
யாசறுந் தரும கன்னி யகடினி தோங்கும் வண்ண
மேசறுந் தவத்தோன் கண்டே யெய்திய காட்சி வாளாற்
றேசறு நெஞ்ச மீர்ந்த செல்லலோ டையங் கொண்டான். |
| |
மாசு அறும் கருப்பம்
ஆகி, வளர்ந்து தேய் திங்கள் ஐந்து
ஆய்
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம்,
ஏசு அறும் தவத்தோன் கண்டே, எய்திய காட்சி வாளால்
தேசு அறும் நெஞ்சம் ஈர்ந்த செல்லலோடு, ஐயம் கொண்டான். |
|