பக்கம் எண் :

முதற் காண்டம்366

 
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும்,
                                      வாய்ந்த
பீள் வளர் பருவத்து எஞ்சாப் பெருந்துயர் வளர்ந்து மிக்கு
                                      ஆய்,
வாள் வளர் புண்ணில் செந்தீ வைத்து என, துயரும் ஆற்றா,
கோள் வளர் புணரி தாழ்ந்து, குளித்த நெஞ்சு
                                அமிழ்ந்துகின்றான்.

     நாட்கள் வளரும் பருவத்திற்கு ஏற்ப அழகிய கருப்பமும்
நல்லவிதமாக வளரும். சூசையோ, கன்னிமரியாளிடம் வாய்ந்துள்ள கருப்பம்
வளரும் பருவந்தோறும் நீங்காத பெருந்துயர் வளர்ந்து மிகுதியாகி, வாளால்
ஏற்பட்ட புண்ணில் செந்தீயை இட்டதுபோல, அத்துயரமும் பொறுக்க
மாட்டாமல், இடையூறு மேன்மேலும் வளரும் கடலில் விழ்ந்து, முதலிற்
குளித்த நெஞ்சு போகப் போக அதனுள் அழுந்தப் பெறுகின்றான்.

 
                             63
கதிர்வரு முகத்தின் மாமை காண்டலிற் கண்ட கண்ணாற்
பொதிர்வரு மன்பு மையப் புன்கணு முளத்துண் டுண்ட
முதிர்வருந் துயரச் செந்தீ முழுவது மவிப்பச் சிந்திப்
பிதிர்வரு மிருகண் ணாறே பெருந்துய ரொழிக்க லாற்றா.
 
கதிர் வரு முகத்தின் மாமை காண்டலின், கண்ட கண்ணால்,
பொதிர் வரும் அன்பும் ஐயப் புன்கணும் உளத்து உண்டு,
                                              உண்ட
முதிர் வரும் துயரச் செந்தீ முழுவதும் அவிப்பச் சிந்தி,
பிதிர் வரும் இரு கண் ஆறே பெருந் துயர் ஒழிக்கவ் ஆற்றா.

     கதிரைப் பொழியும் அவள் முகத்தின் அழகையும் சூசை கண்டான்.
கண்ட கண்ணால் நிறைந்துவரும் அன்பும் ஐயத்தால் ஏற்பட்ட துன்பமும்
தன் உள்ளத்தில் உண்டான். அவ்வாறு உண்ட முதிர்ந்து வரும்
துயரமாகிய செந்தீயை முற்றிலும் அவிக்கும் நோக்கத்தோடு கண்ணீர்
சிந்தினான். அதனால் இரு கண்களினின்றும் சிதறிவரும் இரண்டு
ஆறுகளுமே சூசையின் பெருந்துயரை ஒழக்கமாட்டா ஆயின.