பக்கம் எண் :

முதற் காண்டம்367

                           64
கார்முகத் தெழுந்து சூழக் கதத்தகால் முகத்திற் பவ்வ
நீர்முகத் தெழுந்த வோத நேரநொந் தலைந்த நெஞ்சா
னேர்முகத் தெழுந்த வைய மிவளகன் றகலுந் தன்மை
சீர்முகத் தெழுந்து தேர்ந்து சிந்தையிற் றேற லோர்வான்
 
கார் முகத்து எழுந்து, சூழக் கதத்த கால் முகத்தில் பவ்வ
நீர் முகத்து எழுந்த ஓதம் நேர, நொந்து அலைந்த நெஞ்சான்,
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள் அகன்று அகலும் தன்மை
சீர் முகத்து எழுந்து, தேர்ந்து சிந்தையில் தேறல் ஓர்வான்.

     மழைக் காலத்தில் இயல்பாகவே பொங்கி, சுற்றிலும் சினந்து
அடித்த காற்றின் முன் கடல் நீரில் மேலும் உயர்ந்து எழுந்த
அலைபோல, சூசை நொந்து அலைக்கழிந்த உள்ளங்கொண்டான் : தான்
நேர்முகத்துக் காணுங்கால் எழுந்த ஐயம் இக் கன்னி மரியாள் தன்னை
விட்டு அகன்றதும் அகலும். இத் தன்மையான சிறப்பு வாய்ந்த ஒரு
நேரத்து எழுச்சி கொண்டு, தன் சிந்தையில் ஆராய்ந்து தேறுவதற்கான
முயற்சியை எண்ணுவான்.

     உள்ளத்தில் எழுந்த ஐயத்தைக் காராகவும், மரியாளைக் காணப்
பெறுதலைக் காற்றாகவும் கொண்டு, அலையோடு பொருந்தி, உவமப்
பொருள் விரிக்க. மூன்றாம் அடி, 'ஏர் முகத்து' எனப் பிரிக்கவும் இடந்
தருமெனினும், பின் 'அகன்று அகலும்' என வரும் குறிப்பினோடு
பொருந்த, 'நேர் முகத்து' எனப் பிரித்தலே சிறப்பெனத் தோன்றுகின்றது,

 
                           65
பொய்யெனக் கறைந்தீர் கண்ணே புரையுறாக் கன்னி முன்னாள்
மெய்யெனக் கறைந்த தன்மை மெலியுமோ பளிங்கிற் றூயாள்
மையெனக் களங்க முற்று மயங்குமுன் னிரவி நீட்டுங்
கையெனக் கதிர்கள் மாறிக் கலங்கலே காண்பீ ரென்றான்.
 
"பொய் எனக்கு அறைந்தீர், கண்ணே! புரை உறாக் கன்னி முன் நாள்
மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ? பளிங்கில் தூயாள்
மை எனக் களங்கம் உற்று மயங்கும் முன், இரவி நீட்டும்
கை என் அக் கதிர்கள் மாறிக் கலங்கலே காணவீர்" என்றான்.