நிறை பட, சிறப்பொடு
நிமலன் செய் அருள்
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு,
அறை படத் திரு உளம் அறிந்து இலாமையால்,
பொறை பட, துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள். |
பழுதற்ற ஆண்டவன்
நிறைவாகச் சிறப்பாகத் தனக்குச் செய்த அருட்
பெருங்கருணையை மறைவாக வைத்துப் போற்றுதல் தகுதியாகும் எனத் தன்
மனத்தில் எண்ணியதோடு, அதனை வெளிப்படச் சொல்லக் கடவுளின்
திருவுளம் இன்னதென்று தான் அறிந்திராமையாலும், தன் பொறுமை விளங்க,
அவ்வுண்மையைச் சொல்லிச் சூசையின் பெருகிய துன்பத்தைத் தீர்க்க
முற்படாது அமைந்தாள்.
81 |
அன்பின்னா
லிவன்றுய ரடைந்து ளானெனா
நன்பினா லுவமியா நங்கை யோர்தலாற்
றுன்பினா லுருகினள் துனியை நீக்குமோ
ரின்பினா லுரஞ்செய விறைவற் போற்றினாள். |
|
அன்பினால் இவன்
துயர் அடைந்து உளான் எனா,
நன்பினால் உவமியா நங்கை, ஓர் தலால், துன்பினால்
உருகினள்;
துனியை நீக்கும் ஓர் இன்பினால் உரம் செய இறைவற்
போற்றினாள்.
நன்மையில் தனக்கு யாரும் ஒப்பாதல் இல்லாத
நங்கையாகிய மரியாள், |
தன் மீது கொண்ட
அன்பினால் இவன் இத் துயரம் அடைந்துள்ளான்
என்று உணர்ந்தமையால், தானும் துன்பத்தால் உருகினாள்; அத்துன்பத்தைப்
போக்கக் கூடிய ஒர் இன்ப முறையால் அவன் உள்ளத்திற்கு வலிமை
தருமாறு இறைவனைப் போற்றினாள்.
82 |
வல்லவள்
வளியுருத் ததிர வானுயர்
பல்லவ மரமுமேற் படர்பொன் வல்லியு
மொல்லவை யலைவுறீஇ வளையு முண்மைபோ லில்லவள் கொழுநனோ டிடுக்க ணெய்தினாள |
|