பக்கம் எண் :

முதற் காண்டம்380

                  86
நீரின்மேற் றாள்ரிரிந் தலைந்த நீர்மலர்ச்
சீரின்மே லலைந்தலைந் தமிழ்ந்துஞ் சிந்தையான்
சூரின்மே லனபுளஞ் சுடச்சு டத்தகும்
போரின்மேற் கலங்கியுட் புலம்பி னானரோ.
 
நீரின் மேல் தாள் பிரிந்து அலைந்த நீர் மலர்ச்
சீரின் மேல் அலைந்து அலைந்து அமிழ்ந்தும் சிந்தையான்,
சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட, தகும்
போரின் மேல் கலங்கி உள் புலம்பினான் அரோ:

     தண்டு அறுபட்டு நீரின் மேல் அலைந்த நீர்ப் பூவின் தன்மையினும்
மேலாக அலைந்து அலைந்து துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் சிந்தனை
கொண்ட சூசை, தான் கொண்ட துன்பத்தினும் மேலாகத் தன் மனைவி மீது
கொண்ட அன்பு தன் உள்ளத்தை மிகுதியாகச் சுடுதலினால், தகுதி வாய்ந்த
ஒரு போரினும் மேலாக உள்ளம் கலங்கிப் பின் வறுமாறு புலம்பினான்:

     'அரோ' அசைநிலை.
 
               87
மருடரு கருவென மாதைக் காட்டினே
லிருடரு கசடதா மிவையொ ளிக்கினே
லருடரு மறைமுறை யழித்த லாமினித்
தெருடரு பிரிவலாற் செய்வ தேதுண்டோ.
 
"மருள் தரு கரு என மாதைக் காட்டினேல்,
இருள் தரு கசடு அது ஆம்; இவை ஒளிக்கினேல்,
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம்: இனி,
தெருள் தரு பிரிவு அலால், செய்வது ஏது உண்டோ?"