"முறை மயங்கி
ஏற்பட்ட கருப்பம் இது என்று சொல்லி இப்
பெண்ணைக் காட்டிக் கொடுத்தால், அது நரகத்தைத் தரக் கூடிய பாவமும்
ஆகலாம்; இவ்விவரங்களை மறைக்க முற்பட்டால், அது தெய்வ அருளைத்
தரும் வேத முறையை அழித்த பாவமாய் முடியும்: எனவே, இவற்றினின்று
தெளிவு தருவதாகிய பிரிவே அல்லாமல், செய்யத் தக்கது ஏதேனும்
உண்டோ?"
தெளிவு பெறாத
ஐயத்தின் அடிப்படையில் பழி சுமத்தி ஒருவரது
நற்பெயரைக் கெடுப்பது பரிகரித்தற்கு அரிய பெரிய பாவமாகும்.
ஒழுக்கக்கேட்டை அறிந்தவர் ஊருக்குத் தெரிவித்து வேதநூல் விதிப்படியான
தண்டனை பெறுவிக்கத் தவறுவதும் பழைய வேதமுறைப்படி குற்றமாகும்.
இவ்விரண்டிற்கும் தப்ப, வெளியேறுதல் ஒன்றே வழியெனச் சூசை
கருதுகிறான்.
காட்டினேல்,
ஒளிக்கினேல் என்ற விடத்து, காட்டின், ஒளிக்கின்
என நின்றே 'செயின்' என்ற வாய்ப்பாட்டு வினையெச்சம் அமையும்.
'காட்டுவேனேல்' என்பது போல, வினை முற்றோடு 'ஏல்' என்ற விகுதி
சேர்ந்து, 'செயின்' என்ற வாய்பாட்டோடு 'எல்' விகுதி அமைத்துக் கூறுதல்
முனிவர் மரபு.
88 |
என்னுயி ரதனினூங்
கினிய பொற்றொடி
தன்னுயிர் பிரிந்தியான் றனித்துப் போயின
பின்னுமி ரெனதுடல் பிரிவி லாங்கொலோ
அன்னுயி ருய்யலு மெளிய தோவென்றான். |
|
"என் உயிர்
அதனின் ஊங்கு இனிய பொன் தொடி
தன் உயிர் பிரிந்து, யான் தனித்துப் போயின பின்,
உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்கொலோ?
உன் உயிர் உய்யலும் எளியதோ?" என்றான். |
"என்
உயிரைக் காட்டிலும் எனக்கு இனிய இவளின் உயிரை விட்டுப்
பிரிந்து, நான் தனித்துப் போன பின், என் உயிர் எனது உடலைவிட்டுப்
பிரியாமல் இருக்குமோ? அதனைப் பற்றி நினைக்கும் உயிர் பிழைத்தலும்
எளியதாகுமோ?" என்றான்.
பொற்றொடி -
பொன் வளையல்: பொன் வளையல் அணிந்த பெண்:
இங்கு வெறுமனே 'பெண்' என்ற பொருளில் நின்றது. பிரிந்து + யான் -
பிரிந்தியான்: யகரம் வரக் குற்றுகரம் இகரமாய்த் திரிந்தது.
|