92 |
என்னுள
மறிந்தவோ ரெதிரில் நாதனே
யுன்னுள மினதென உளத்தி லுன்னலான்
மின்னலை யகலுது விவளை மேவிநீ
துன்னலை வகற்றுதி யென்று துஞ்சினான். |
|
"என் உளம் அறிந்த
ஓர் எதிர் இல் நாதனே,
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால்,
மின்னலை அகலுது. இவளை மேவி நீ,
துன்னு அலைவு அகற்றுதி" என்று துஞ்சினான். |
"என் உள்ளக்
கருத்தை அறிந்துள்ள, ஒப்புக் கூற, ஒரு பொருளும்
இல்லாத கடவுளே, உன் திருவுளம் இதுவே என்று என் உள்ளத்தில்
கருதுவதனால், மின்னலைப் போன்ற இவளை விட்டு நீங்குவேன். நீயே
இவளைப் பொருந்தியிருந்து அணுகும் துன்பங்களையெல்லாம்
போக்குவாயாக" என்று வேண்டிச் சூசை துயில் கொண்டான்.
அகலுது
- அகலுவேன்: 'து' விகுதி எதிர்காலத்தையும்
தன்மையொருமையையும் காட்டிற்று. அகலுது + இவளை -
அகலுதுவிவளை: குற்றியலுகரம் கெடாமல், 'ஏனை யுயிர் வழி வவ்வும்'
என்ற பொது விதிப்படி வகர உடம்படுமெய் பெற்று வந்தது.
மரியாள்
பரிவு
93 |
குணித்தயா
நினைவையுங் குறையில் கோதெலாந்
துணித்தமா மடந்தைகாண் சூட்சி யாறனைத்
தணித்தமா துணையவன் றணந்து போயினாற்
கணித்தமா துயரினாற் கலுழ்ந்த ரற்றினாள். |
|
குணித்த யா நினைவையும்,
குறை இல் கோது எலாம்
துணித்த மா மடந்தை, காண் சூட்சியால், தனைத்
தணித்த மா துணையவன் தணந்து போயினால்,
கணித்த மா துயரினால் கலுழ்ந்து அரற்றினாள்: |
|