97 |
என்றலுங்
கபிரியேற் கேவல் செய்தறா
மன்றலும் பிழியும்பெய் வாகைச் சூசைகட்
சென்றழுந் தியதுயர் தீர்ப்பச் சூல்வினை
நன்றழுந் துவப்பெழ நவில்கு வாயென்றான். |
|
என்றலும்,
கபிரியேற்கு ஏவல் செய்து, "அறா
மன்றலும் பிழியும் பெய் வாகைச் சூசைகண்
சென்று, அழுந்திய துயர் தீர்ப்ப, சூல் வினை,
நன்று அழுந்து உவப்பு எழ, நவில்குவாய்" என்றான். |
என்று இவ்வாறு
இறைவன் திருவுளம் கொண்டதும், கபிரியேல்
என்னும் வானவனுக்குக் கட்டளையிட்டு, "நீங்காத மணமும் தேனும்
பொழியும் மலர்க் கொடியை உடைய சூசையிடம் நீ சென்று, அவன்
மனத்தில் அழுந்திக் கிடந்த துயரத்தைத் தீர்க்கவும், நன்கு அழுந்திய
மகிழ்ச்சியால் எழுச்சி பெறவும், தன் துணைவியிடம் கருப்பம் உண்டான
செயல் பற்றிய விவரங்களைச் சொல்லுவாய்" என்றான்.
ஐயந்
தோற்று படலம் முற்றும்.
ஆகப்
படலம் 7க்குப் பாடல் 623.
|