பக்கம் எண் :

முதற் காண்டம்388

எட்டாவது
 

 
ஐய நீங்கு படலம்
 

     கன்னி மரியாளின் கருப்பம் பற்றி எழுந்த ஐயம் நீங்கிச் சூசை
தெளிவு கொண்டதைக் கூறும் பகுதி.

                    கனவில் தெளிந்த ஐயம்

     - - காய், - - காய், - - காய், - - காய், - மா, தேமா.
 
                       1
செல்லாரு முலகிமைக்குஞ் செங்கதிரோ னுருத்தோன்றித்
                               தேவ வல்லோன்
வில்லாரு மணியிமைக்கு முடிசூடித் தேன்றூற்றும் விரதச்
                               செவ்வாய்
சொல்லாரும் பங்கயக்கண் பொன்வரைத்தோள் சுடர்கலந்
                               தோற்று மேனி
யெல்லாருங் கதிரெ றிப்ப விக்குமிழு மலர்க்கொடியோ
                               னிடத்துச் சென்றான்.
 
செல் ஆரும் உலகு இமைக்கும் செங் கதிரோன் உருத் தோன்றி,
                          தேவ வல்லோன்,
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி, தேன் தூற்றும் விரதச்
                          செவ் வாய்,
சொல் ஆரும் பங்கயக் கண், பொன் வரைத் தோள், சுடர்
                          அகலம் தோற்று மேனி
எல் ஆரும் கதிர் எறிப்ப, இக்கு உமிழும் மலர்க்
                          கொடியோனிடத்துச் சென்றான்.

     இறைவன் தந்த வல்லமையைக் கொண்டுள்ள வானவன், மேகங்கள்
நிறைந்த வானுலகில் விளங்கும் செங்கதிர் கொண்ட பகலவன் வடிவமாகத்
தோன்றி, ஒளி நிறைந்த மணிகள் விளங்கும் பொன் முடியைத் தலையில்
சூடி, தேனைப் பொழியும் வாய்மை விரதம் பூண்ட செந்நிற வாயும், புகழ்ச்
சொல் பொருந்திய தாமரை மலர் போன்ற கண்ணும், பொன் மலை போன்ற