தோளும், ஒளி பொருந்திய
மார்புமாகத் தோன்றும் மனித உடலிலிருந்து
ஒளி நிறைந்த கதிர்கள் வீசிய வண்ணமாய், தேனைப் பொழியும்
பூங்கொடியை உடைய சூசையினிடம் சென்றான்.
இவ்வானவன் கபிரியேல்
என்பது முந்திய பாடலால் அறிக. இவனே,
மரியாள் கன்னி அறாது கடவுளைக் கருத் தாங்கத் தூது வந்தவன் என்பது
முந்திய படலத்து முற்பகுதி கொண்டு தெளிக,
2
|
கட்புலனாங்
கதவடைத்த கரியதுயிற் கொண்டதவக் கரையைக்
கண்டோ
னுட்புலனா லறிவமைந்துள் ளுருக்குகின்ற துயர்நீக்கி யுவகை
யெய்த
விட்புலனாங் கிரவியென விண்ணவன்வந் துளத்துருவம்
வேயத் தோன்றி
மட்புலனா னிருசெவியால் வானுரிய வின்பருந்த மதுச் சொற்
கொண்டான் |
|
கண் புலன் ஆம்
கதவு அடைத்த கரிய துயில் கொண்ட தவக்
கரையைக் கண்டோன்
உள் புலனால் அறிவு அமைந்து, உள் உருக்குகின்ற துயர் நீக்கி
உவகை எய்த,
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து, உளத்து
உருவம் வேயத் தோன்றி,
மண்புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த, மதுச்
சொல் கொண்டான்: |
கண் உணர்வாகிய
கதவை அடைத்துக்கொண்ட இருண்ட தூக்கத்தில்
ஆழ்ந்து கிடந்த, தவத்தின் கரை கண்டவனாகிய சூசை, தன் உள்ளுணர்வால்
அறியப் பெற்று, தன் உள்ளத்தை உருக்குகின்ற ஐயத் துயரைப் போக்கி
மகிழ்ச்சி அடையுமாறு, வானுலகத்தில் தோன்றும் ஞாயிறு போல
இவ்வானவன் வந்து, சூசையின் உள்ளத்தில் தன் உருவம் பதியும்படி
தோன்றி, மண்ணுலகத்தவனாகிய சூசை வானுலகுக்கு உரிய இன்பத்தைத்
தன் இரு செவிகளால் அருந்துமாறு, தேன் போன்ற சொல்லைப் பேசத்
தொடங்கினான்:
|